நான் குடிப்பேன் தான், ஆன நீ எப்ப எனக்கு சரக்கு வாங்கி கொடுத்த – திரௌபதி இயக்குனரை கிழித்த காஜல்.

0
6691
kajal
- Advertisement -

சமீபத்தில் இயக்குனர் மோகன், தான் ஒரு சத்ரியன் என்பதில் பெருமை என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில் கொரோனா வைரஸை ராமன் அழிக்க போவது போன்ற ஒரு மீம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, இங்கு இருக்கும் பலருக்கு இது ஒரு சவுக்கடி என்று குறிப்பிட்டிருந்தார்.இந்த டீவீடிக்கு கமன்ட் செய்த நடிகையும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளருமான காஜல் ‘என்ன சொல்ல வரார் இந்த சூத்திரன் என்று அவாளால் அழைக்கப்படும் இவர்’ என்று கிண்டலடித்தார்.

-விளம்பரம்-

இதற்கு பதில் அளித்த மோகன், என்னங்க மேடம்.. வேலை வெட்டி இல்லாம போச்சா.. விளம்பரம் தேவைபடுதா.. இப்படி குறுக்கு வழியில வராம திறமைய நம்பி உழைங்க.. முன்னேறலாம்.. நல்ல குணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள்.. நல்வாழ்வு அமைய வாழ்த்துக்கள்.என்று பதில் அளித்தார்.இதற்கு பதில் அளித்த காஜல், யாருங்க குறுக்குவழி பத்தி பேசுறது குறுக்கு வழியில் போய் இருந்தா இப்படி வெட்டியா இருக்க மாட்டேன் சார். எப்பவோ தமிழ் டிவின்னு ஒன்னு ஆரம்பிச்சு இருப்பேன். உங்க பழைய வண்ணாரப்பேட்டை படத்துக்கு ஃப்ரீயா தான் நடித்துக் கொடுத்தேன் யார் காள்லையும் நான் விழல என்று பதில் அளித்தார்.

- Advertisement -

அதற்கு மோகன், இவவசமாகவா.. சுயநினைவு இருக்கா மேடம்.. என்ன என்ன எல்லாம் வாங்கி கொடுத்தேன், தினம் எவ்வளவு சம்பளம் கொடுத்தேன்னு லிஸ்ட் சொல்லனுமா.. அன்று காட்டிய அதே கண்ணியம் இன்றும் உண்டு என்னிடம்.. அதனால் சொல்லி காட்ட விரும்பல.. கவனமாக இருங்க உங்க ரசிகர்களிடம் என்று பதில் அளித்தார்.அதற்கு காஜல், என்ன விளையாடுறீங்களா நீ யாருக்கு என்ன வாங்கி கொடுத்தன்னு தெரியல பாஸ். எனக்கு சாப்பாடு, கேரவன், அசிஸ்டன்ட் சம்பளம்தான். இது எல்லா படத்திலேயும் கொடுப்பாங்க பாஸ். ரெண்டு படம் எடுத்துமா இது தெரியல. சம்பளமும் னு ஒன்னு இருக்கு. நான் வேலை பாக்குறப்ப பார்ட்டி பண்ணதே இல்லைங்கோ என்று பதில் அளித்துள்ளார்.

வீடியோவில் 14 : 10 நிமிடத்தில் பார்க்கவும்

காஜல் மற்றும் மோகன் இருவரின் இந்த ட்வீட் வைரலாக பரவ சமீபத்தில் இது குறித்து பேட்டி ஒன்றில் விளக்கமளித்துள்ளார் காஜல், நான் போட்ட ட்வீட் எப்படி வைரலானது என்பது எனக்கு தெரியவில்லை. மேலும், இவர் (மோகன்) சமீப காலமாக போட்டு வந்து பதிவுகளை நான் பார்த்து கொஞ்சம் கடுப்பாக இருந்தேன், அதனால் தான் அந்த டீவீட்டை நான் போட்டேன்.

-விளம்பரம்-

அதற்கு அவர் எதோ எனக்கு என்னென்னவெல்லாம் வாங்கி கொடுத்தேன் என்று லிஸ்ட் போடுகிறார். நான் அவருடைய பழைய வண்ணார பேட்டையில் நடித்தேன். அதில் அவர் வேலை செய்பவர்களுக்கு சரியான பேட்டா கூட குடுக்கவில்லை. அவ்வளவு ஏன் பிரஜனுக்கு கேரவன் கூட கொடுக்கவில்லை அவனே அவனின் சொந்த காரில் தான் வருவான். நான் குடிப்பேன் தான் இல்லை என்று மறுக்கவில்லை. ஆனால், நான் குடிகாரி கிடையாது எப்போதாவது எதாவது நிகழ்ச்சிகளில் குடிப்பேன். ஆனால், இவர் எப்போது எனக்கு சரக்கு வாங்கி கொடுத்தார். ஒரு வேலை அவர் நிதானத்தில் இல்லையா என்று கூறியுள்ளார் காஜல்.

Advertisement