ஆனந்த கண்ணனுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய காஜல். வைரலாகும் புகைப்படம்.

0
95209
anandha-kannan
- Advertisement -

தமிழ் சினிமாவில் காரணியாக இருந்து ஒரு நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை காஜல் பசுபதி தமிழில் பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர் கடந்த 2011ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் துவங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சிமூலம் மத்தியில் பிரபலம் அடைந்தார். மேலும் பிக் பாஸ் சீசன் 3 போட்டியாளரும் பிரபல நடன இயக்குனருமான சான்டியுடன் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்தார். மேலும் இவர்கள் முறைப்படி திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்பட்ட நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இவரிடமிருந்து பிரிந்துவிட்டார்.

காஜல் ஆரம்பத்தில் சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். மேலும் இவர் பணியாற்றிய போது இவருடன் பணியாற்றிய ஆனந்தகண்ணனையும் யாராலும் மறக்க முடியாது. இவர் உண்மையில் ஒரு சிங்கப்பூர் தமிழர். சிங்கப்பூரில் உள்ள வசந்தம் தொலைக்காட்சி என்ற டீவி சேனனில் ஒரு நிகச்ழ்சியை தொகுத்து வழங்கி வந்தார். பின்னர் ரேடியோ சிட்டி எப்.எம் ரேடியோ ஜாக்கியாக வாய்ப்பு கிடைத்து குடும்பத்துடன் சென்னையில் வந்து செட்டில் ஆனார் ஆனந்த கண்ணன். ரேடியோ சிட்டியில் வேலை செய்துகொண்டிருக்கும் போதே, சன் மியூசிக் சேனலில் வைக்கப்பட்ட ஆடிசனில் கலந்துகொண்டு வீ.ஜேவாக தேர்வானார் ஆனந்த கண்ணன்.

- Advertisement -

அதன்பின்னர் சன் டிவியில் சிந்துபாத் என்ற குழந்தைகளை கவரும் நாடகத்தில் நடித்தார் ஆனந்த கண்ணன். இவர் நடித்த விக்ரமாதித்தன் தொடர் 90களில் பிறந்த குழந்தைகளின் பேவரட் நாடகம் ஆகும். மேலும், 2012 ஒரு பேன்டஸி 3டி படத்தில் நடித்தார் ஆனந்த கண்ணன். இந்த படத்தின் பெயர் அதிசய உலகம். மேலும், வெங்கட்பிரபுவின் சரோஜா படத்திலும் நடித்தார். அதன்பின்னர் இத்தனை நாளாய் எங்கிருந்தாய் என்ற படத்தில் ஹீரோவாகவும் நடித்தார் ஆனந்த கண்ணன். அதன்பின்னர் சரியாக பட வாய்ப்புகள் இல்லாததால், கடந்த 2013ஆம் ஆண்டு சென்னையை விட்டு மீண்டும் சிங்கப்பூருக்கு தன் குடும்பத்துடன் சென்று செட்டில் ஆகிவிட்டார்.

savaal-singapore

-விளம்பரம்-

தற்போது தான் முதன்முதலாக வேலை செய்த வசந்தம் டீவியில் மீண்டும் சேர்ந்து தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார் ஆனந்த கண்ணன். இவருக்கு திருமணம் ஆகி ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது. இன்று நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடபட்டு வரும் நிலையில், காஜல், ஆனந்த கண்ணனுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisement