வாய்ப்பு கேட்டதும் நண்பனே நடு ராத்திரியில் இப்படி பண்றான் – வேதனையுடன் கூறிய பிக் பாஸ் காஜல்.

0
516
kajal
- Advertisement -

வாய்ப்பு கேட்டு சென்ற இடத்தில் தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து காஜல் பசுபதி அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் காஜல் பசுபதி. இவர் முதன் முதலில் நடிகையாக நடித்தது வசூல்ராஜா எம்பிபிஎஸ் திரைப்படத்தின் மூலம் தான். இந்த படத்தில் ஒரு செவிலியர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் காஜல்.

-விளம்பரம்-

அதன் பின்னர் ஜீவா நடிப்பில் வெளியான டிஷ்யூம் படத்தில் சந்தியாவின் தோழியாக படம் முழுவதும் நடித்திருந்தார். அதன் பின் இவர் பல்வேறு திரைப்படங்களிலும் நடித்து இருக்கிறார். மேலும், படங்களில் தொடர்ந்து நடித்து வந்த காஜல் நடன இயக்குனரான சாண்டியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால், தனிப்பட்ட பிரச்சினை காரணமாக இவர்கள் இருவரும் பிரிந்து விட்டார்கள். விவாகரத்துக்கு பின்னர் சாண்டி வேறு திருமணம் செய்துகொண்டார்.

- Advertisement -

காஜல் பசுபதி குறித்த தகவல்:

தற்போது சாண்டிக்கு ஒரு மகளும் ஒரு மகனும் இருக்கின்றனர். ஆனால், சாண்டியை பிரிந்த காஜல் இன்னும் திருமணம் செய்யாமல் சிங்கிளாக தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். விவாகரத்திற்கு பின்னரும் சாண்டியுடன் ஒரு நல்ல தோழியாக இருந்து வருகிறார் நடிகை காஜல். அதற்குப்பின் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பிரபலமாக திகழும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் காஜல் போட்டியளராக சென்றிருந்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் காஜல்:

ஆனால், சில நாட்களிலேயே இவரால் தாக்குபிடிக்காமல் வெளியே வந்து விட்டார். அதற்கு காரணம் இவருடைய பேச்சும், கருத்துக்கள் தான். மேலும், இவர் சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கிறார். தான் அடிக்கடி எடுக்கும் போட்டோ சூட் புகைப்படம், வீடியோக்கள் என்று ஏதாவது ஒன்றை காஜல் பகிர்ந்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் காஜல் பசுபதி பேட்டி ஒன்று அளித்து இருந்தார். அதில் அவர் தனக்கு நேர்ந்த பாலியல் தொடர்பான தொல்லைகள் குறித்து பேசி இருக்கிறார்.

-விளம்பரம்-

காஜல் அளித்த பேட்டி:

அதில் அவர் கூறியது, எனக்கு நெருங்கிய தோழி ஒருவரின் காதலன் ஒருவர். அவருடைய பெயரை குறிப்பிட விரும்பவில்லை. அவருக்கு பெரிய சேனல் ஒன்றின் தலைமையில் இருப்பவரை நன்றாக தெரியும். அந்த முறையில் நான் அவரிடம் ஒரு உதவி கேட்டேன். உன்னுடைய நண்பர் தானே சீரியல் சேனல் ஹெட். நான் சீரியல் பண்ணலாம் என்று ஐடியாவில் இருக்கேன். கொஞ்சம் அவரிடம் சொல்லி ஏதாவது பண்ண முடியுமான்னு பாரு என்று உதவி கேட்டேன். அதுவரை என்னிடம் மரியாதையாக பேசிய அவன் ஒரு நாள் திடீரென்று நடுராத்திரி போன் செய்கிறான்.

பாலியல் தொல்லை குறித்து சொன்னது:

சில அடையாளங்களை கூறி, மச்சி எனக்கு இந்த மாதிரி பொண்ணு வேணும் என்று அசிங்கமாக என்னிடம் பேசினான். அதைப்பற்றி என்னிடம் ஏன் சொல்ல வேண்டும்? என்னிடம் அந்த மாதிரி பேச வேண்டிய அவசியமே இல்லை? இத்தனைக்கும் அவன் என்னுடைய நண்பன். அதற்குப் பிறகு அவனிடம் நான் பேசுவதே இல்லை. நண்பனே இப்படி தான் பேசுவான் என்றால் வேறு எங்கு தான் போய் முட்டிக்கொள்வது. அதனால் தான் வாய்ப்புகளை போய் கேட்க விரும்பாமல் போனேன். வரக்கூடிய வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளலாம். சம்பள விஷயத்தில் வேணும் என்றால் சமரசம் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்து விட்டேன். மற்ற விஷயங்களில் நான் சமரசம் செய்ய முடியாது என்று கூறியிருந்தார்.

Advertisement