பிக் பாஸில் கலந்துகொள்வது குறித்து ரசிகர் கேட்ட கேள்விக்கு காஜல் பதில் அளித்துள்ளார். சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் காஜல் பசுபதி. காஜல் முதன் முதலில் வசூல்ராஜா எம்பிபிஎஸ் திரைப்படத்தில் தான் நடித்தார். இந்த படத்தில் ஒரு செவிலியர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் ஜீவா நடிப்பில் வெளியான டிஷ்யூம் படத்தில் சந்தியாவின் தோழியாக படம் முழுவதும் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து சிங்கம், கோ, மௌனகுரு, கௌரவம், இரும்பு குதிரை, கலகலப்பு 2 போன்ற பல்வேறு படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
காஜல்-சாண்டி திருமணம்:
பின் காஜல் நடன இயக்குனரான சாண்டியை காதலித்து திருமணம் செய்துகொண்டார் ஆனால், தனிப்பட்ட பிரச்சினை காரணமாக இவர்கள் இருவரும் பிரிந்து விட்டார்கள். விவாகரத்திற்கு பின்னரும் சாண்டியுடன் ஒரு நல்ல தோழியாக இருந்து வருகிறார் நடிகை காஜல். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக காஜல் கலந்து இருந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு இவர் மக்கள் மத்தியில் மீண்டும் பிரபலமானார். அதனை தொடர்ந்து படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
வைரலாகும் கஜோல் சண்டை வீடியோ:
மேலும், கஜோல் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார். சினிமா, நாட்டு நடப்பு என்று பல விஷயங்களைப் பற்றிப் போஸ்ட் போடுவார். அதுமட்டுமில்லாமல் சிலரை பங்கமாக மரண கலாய் செய்து இருக்கிறார். இந்நிலையில் காஜல் பசுபதி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருந்தார். அப்போது அவர் நிகழ்ச்சியில் பங்குபெற்ற நபரிடம் கத்தி பயங்கரமாகச் சண்டை போட்டு இருக்கிறார். அதற்கான வீடியோ எல்லாம் சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது. அதற்கு பலரும் கஜோல் குறித்து ட்ரோல் செய்து வந்தனர்.
பிக் பாஸ் OTTயில் காஜலா ? :
அதிலும் சிலர் கஜோலை ‘பஜாரி’ என்று விமர்சித்து இருக்கிறார்கள். இதைப்பார்த்த கஜோல் அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் கொண்டு போட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, லூசு மாதிரி கோவப்படாமல் அமைதியாக வெளியே வந்தால் காமெடி பீஸ்ன்னு சொல்றது. அங்க ஒருத்தன் கெட்ட வார்த்தையில் பேசினால் வாயை மூடிட்டு இருக்காமல் கோபப்பட்டால் உடனே பஜாரி என்று சொல்றது. என்னங்கடா டேய் உங்க நியாயம். பேசினாலும் தப்பா என்று பதிவிட்டுள்ளார்.
பிக் பாஸ் Ottயில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் :
இதை பார்த்த ரசிகர் ஒருவர், நீங்க பேசாம பிக்பாஸ் OTT போய் இந்த டைம் வைச்சு செய்யுங்க என சொல்கிறார். உடனே இதை பார்த்த கஜோல், ‘கூப்பிட மாட்டாங்களே’ என்று கிண்டலாக பதிலளித்துள்ளார். இவரின் பதிவு தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் கமெண்ட் போட்டு வருகிறார்கள். தமிழில் பிக் பாஸ் OTT விரைவில் துவங்க இருக்கிறது. இதில், வனிதா, அனிதா, ஷாரிக், பாலாஜி, சுஜா வருனீ ஆகியோர் கலந்துகொள்வதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.