தன் முன்னாள் காதலர் சாண்டியின் மகனை முதன் முறையாக சந்தித்த தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார் காஜல். சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் காஜல் பசுபதி. மேலும், இவர் பல்வேறு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நடிகை காஜல்முதன் முதலில் நடிகையாக அறிமுகமானது வசூல்ராஜா எம்பிபிஎஸ் திரைப்படத்தில்தான். இந்த படத்தில் ஒரு செவிலியர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் காஜல். அதன் பின்னர் ஜீவா நடிப்பில் வெளியான டிஷ்யூம் படத்தில் சந்தியாவின் தோழியாக படம் முழுவதும் நடித்திருந்தார்.
மேலும், சிங்கம். கோ. மௌனகுரு. கௌரவம். இரும்பு குதிரை கலகலப்பு2 போன்ற பல்வேறு படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் காஜல் பசுபதி.தொடர்ந்து படங்களில் நடித்து வந்த காஜல் நடன இயக்குனரான சாண்டியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் தனிப்பட்ட பிரச்சினை காரணமாக இவர்கள் இருவரும் பிரிந்து விட்டார்கள். விவாகரத்துக்கு பின்னர் சாண்டி வேறு திருமணம் செய்துகொண்டார்.
சாண்டியை பிரிய காரணம் :
இதுவும் காதல் திருமணம் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது சாண்டிக்கு ஒரு மகளும் ஒரு மகனும் இருக்கின்றனர். ஆனால், சாண்டியை பிரிந்த காஜல் இன்னும் திருமணம் செய்யாமல் சிங்கிளாக தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். மேலும் விவாகரத்திற்கு பின்னரும் சாண்டியுடன் ஒரு நல்ல தோழியாக இருந்து வருகிறார் நடிகை காஜல். ஒரு பேட்டியின் போது சாண்டியின் பிரிவு குறித்து பேசிய காஜல் ‘நாங்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவரை காதலித்து முறைப்படி பதிவு திருமணம் செய்து கொண்டோம்.
நாங்கள் முறைப்படி திருமணம் செய்தோம் :
எங்கள் காதல் திருமணத்திற்கு பெற்றோர்கள் விருப்பம் தெரிவிக்க மாட்டார்கள் என்பதால் அவர்களிடம் மறைத்து தனியாக வாழ்ந்து வந்தோம். ஆனால், அதனை லிவிங் டு முறையில் வாழ்வதாக கூறிவிட்டார்கள்.சாண்டி என்னை பிரிவதற்கு நான் தான் முக்கிய காரணம். சாண்டியின் மீது அதிகப்படியான பாசத்தினால் அவரை நான் மிகவும் கஷ்டப்படுத்தி இருக்கிறேன். இதனால் எங்களுக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டு நாங்கள் பிரிந்து விட்டோம்.
சாண்டி குடும்பத்துடன் நட்பு :
ஆனால், தற்போது சாண்டி மற்றும் அவரது மனைவியுடன் நல்ல உறவில் இருந்து வருகிறேன் என்று கூறி இருந்தார். அதே போல சாண்டிக்கு திருமணம் ஆன பின்னரும் அவரது குடும்பத்துடன் நல்ல நட்பில் இருந்து வருகிறார் காஜல். மேலும், அவ்வப்போது சாண்டியின் வீட்டிற்கு சென்று வருகிறார். இந்த நிலையில் சாண்டியின் வீட்டிற்கு சென்று அவரது மகனை முதல்முறையாக சந்தித்து இருக்கிறார் காஜல்.
சாண்டி மகனை சந்தித்த காஜல் :
மேலும், சாண்டி மற்றும் அவரது மனைவி மற்றும் அவரது மனைவியின் தங்கை ஆகியாருடன் புகைப்படம் எடுத்து தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டு இருக்கும் காஜல் முதன்முறையாக சாண்டியின் மகனை சந்தித்தது குறித்தும் தன்னை இத்தனை அன்பில் ஆழ்த்திய சாண்டியன் மனைவிக்கும் அவரது தங்கைக்கும் தன்னுடைய நன்றி என்றும் மிக உருக்கமாக பதிவிட்டு இருக்கிறார். இந்த பதிவை கண்ட சிலர் உங்களுக்கு மிகவும் பெருந்தன்மை என்று கமெண்ட் செய்ய என்னைவிட சாண்டின் குடும்பத்திற்குத் தான் பெருந்தன்மை என்று கூறியிருக்கிறார் காஜல்.