ex wife -அ அழைத்த சாண்டி மனைவிக்கு தான் பெரிய மனசு – காஜல் பகிர்ந்த உருக்கமான புகைப்படம்.

0
7800
sandy
- Advertisement -

சினிமா திரை உலகில் டான்ஸ் மாஸ்டர் சாண்டி என்று சொன்னாலே போதும் எல்லாருக்குமே தெரியும்.சாண்டி மாஸ்டர் பத்தி சொல்லனும்னா…இவர் ஒரு இந்திய திரைப்பட நடன ஆசிரியர். இவர் சினிமா திரைப்படங்கள் மற்றும் பல நிகழ்ச்சிகளில் நடன ஆசிரியராகவும், பல மேடை நடனங்களையும் தொகுத்து வழங்கி வந்துள்ளார். அது மட்டும் இல்லைங்க இவர் சினிமா திரை உலகில் பிரபலமான நடன ஆசிரியர் என்று சொன்னால் கலா மாஸ்டரை சொல்லலாம். மேலும், சாண்டி கலா மாஸ்டரின் மாணவனாக தான் முதலில் அறிமுகமானார். பின்னர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சியில் ஒரு ஜோடிக்கு நடன ஆசிரியராக பணிபுரிந்தார்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is kajal-1.jpg

பின்னர் சாண்டி இந்த அளவிற்கு சினிமா துறையில் நடன ஆசிரியராக மாறி உள்ளார். சாண்டி மாஸ்டர் விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்றார்.சாண்டிக்கும் திரையுலகில் பிரபலமான காஜல் பசுபதிக்கும் சில வருடங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார்கள். பின்பு இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து கொண்டார்கள்.

இதையும் பாருங்க : நடிகர் சிபிராஜின் இரண்டு மகன்களை பார்த்துளீர்களா ? மூத்தவருக்கு மாவீரனின் பெயர்.

- Advertisement -

அதற்கு பின்னர் தான் சாண்டி 2017ஆம் ஆண்டு சில்வியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதோடு இவர்களுக்கு ஒரு அழகான லாலா என்ற பெண் குழந்தையும் உள்ளது. ஆனால், தங்களது காதல் பிரிந்ததற்கு காரணம் சாண்டி இல்லை என்றும் நான் தான் அவரை மிகவும் லவ் என்ற பெயரில் டார்ச்சர் செய்ததாகவும் காஜல் பல முறை கூறி இருக்கிறார். இரண்டாம் திருமணம் ஆனாலும் முன்னாள் மனைவியான காஜலை தனது குடும்பத்தாருடன் பேச வைத்தார் சாண்டி.

அதே போல விவாகரத்து பெற்றாலும், சாண்டியின் குடும்பத்துடன் நல்ல நட்பில் இருந்து வரும் காஜல், கடந்த 2019 ஆம் ஆண்டு சாண்டியின் மனைவி மற்றும் குழந்தையை நேரில் சந்தித்த புகைப்படத்தை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இப்படி ஒரு நிலையில் அந்த புகைப்படத்தை மீண்டும் பதிவிட்டுள்ள காஜல்,

-விளம்பரம்-
Advertisement