‘கிளிய வளத்து பன்னிகிட்ட கொடுத்துடீங்க’ – மஹாலக்ஷ்மி ரவீந்தர் திருமணத்தை கேலி செய்தவர்களுக்கு காஜல் பதிலடி.

0
521
kajal
- Advertisement -

சமீபத்தில் நடிகை மஹாலக்ஷ்மி தயாரிப்பாளர் ரவீந்தரை திருமணம் செய்து இருந்த நிலையில் இந்த திருமணத்தை கேலி செய்தவர்களுக்கு மஹாலக்ஷ்மியின் சக தோழி காஜல் பசுபதி பதிலடி கொடுத்துள்ளார். சின்னத்திரை சிரியலில் மிக பிரபலமான நடிகையாக மகாலக்ஷ்மி திகழ்ந்து வருகிறார். இவர் சன் மியூசிக் தொலைக்காட்சியில் வீடியோ ஜாக்கியாக தான் தன்னுடைய கேரியரை தொடங்கினார். பின் இவர் நிகழ்ச்சிகளை தொகுத்தும் வழங்கும் தொகுப்பாளினியாக இருந்து வந்தவர். இவர் முதன் முதலாக சன் டிவியில் ஒளிபரப்பான அரசி சீரியல் மூலம் தான் சின்னத்திரைக்குள் நுழைந்தார்.

-விளம்பரம்-

இதனை தொடர்ந்து இவர் தாமரை, வாணி ராணி, தேவதையைக் கண்டேன், பொண்ணுக்கு தங்க மனசு உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துஇருக்கிறார்.நடிகை மஹாலக்ஷ்மி 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவரது திருமணம் காதல் திருமணம் தான். திருமணத்திற்கு பின்னர் இவர்களுக்கு அழகான ஆண் குழந்தையும் இருக்கிறது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “தேவதையை கண்டேன்” என்ற சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றது.

- Advertisement -

ஈஸ்வர் – மஹாலக்ஷ்மி காதல் :

இந்த தொடரில் ஹீரோவாக ஈஸ்வரும், வில்லியாக மஹாலக்ஷ்மியும் நடித்து வந்தனர். இந்த தேவதையை கண்டேன் சீரியல் மூலம் மஹாலக்ஷ்மிக்கும், ஈஸ்வருக்கும் கள்ளத் தொடர்பு இருக்கிறது என்று ஈஸ்வர் மனைவி ஜெயஸ்ரீ போலீசில் புகார் அளித்து இருந்தார். இது சின்னத்திரை வட்டாரத்தில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் ஈஸ்வர் மனைவி ஜெயஸ்ரீ தற்கொலைக்கு கூட முயன்று இருந்தார்.

ரவீந்தர் – மஹாலக்ஷ்மி திடீர் திருமணம் :

பின் அவர் கொடுத்த புகாரின் பெயரில் ஈஸ்வர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் வெளியில் வந்தார். இப்படி ஒரு நிலையில் மஹாலக்ஷ்மி, தயாரிப்பாளர் ரவீந்தரை திருமணம் செய்துகொண்டு இருக்கிறார். சமீபத்தில் ரவீந்தர் தனது முகநூல் பக்கத்தில் மஹாலக்ஷ்மியுடன் மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு ‘மஹாலட்சுமி போல ஒரு பொண்ணு கிடச்சா வாழ்க்கை நல்லா இருக்குனு சொல்லவாங்க. ஆனா அந்த மகாலட்சுமியே வாழ்க்கையை கிடச்சா. Coming soon live in FAT MAN FACTSKutty story with my pondatiiiii என்று பதிவிட்டு இருக்கிறார்.

-விளம்பரம்-

மஹாலக்ஷ்மியின் பதிவு :

ரவிந்தரனின் இந்த பதிவிற்கு ரசிகர்கள் பலரும் வாழ்துக்களை தெரிவித்து வருகின்றனர்.மேலும், இரண்டாம் திருமணத்திற்கு பின்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதன் முறையாக நடிகை மஹாலக்ஷ்மி பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் ‘என் வாழ்க்கையில் நீ கிடைத்ததற்கு நான் அதிர்ஷ்டசாலி.. உன் அன்பினால் என் வாழ்க்கையை நிரப்புகிறாய்.. லவ் யூ அம்மு’ என்று பதிவிட்டுள்ளார். மஹாலக்ஷ்மியின் இந்த பதிவிற்கு ரசிகர்கள் பலர் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

கேலி செய்தவர்களுக்கு காஜல் பதிலடி :

இப்படி ஒரு நிலையில் சமூக வலைதளத்தில் ரவீந்தரை திருமணம் செய்த மஹாலக்ஷ்மியை கேலி செய்தவர்களுக்கு காஜல் பசுபதி பதிலடி கொடுத்து வருகிறார். அந்த வகையில் முகநூலில் பெண் ஒருவர் ‘மனச மனி பர்ஸ் உள்ள ஒளிச்சி வச்சிருக்காங்களா என்று கேலி செய்து இருந்தார். அதற்கு பதிலடி கொடுத்த காஜல் ‘அது எப்படிங்கோ, நயன் விக்னேஷ் சிவன கட்டினாலும் நயன் தான் தப்பு. மஹாலக்ஷ்மி ரவீந்தரை கட்டிக்கிட்டாலும் மஹாலக்ஷ்மி தான் தப்பு. என்ன ஒரு அம்பல புத்தில’ என்று பதிவிட்டு ‘பெண்களே பெண்களுக்கு எதிரா இருக்கற வரைக்கும் ஆண்கள அசைக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.’

Advertisement