பெண்கள இப்டி பேசுவியா? நடுரோட்டில் யூடியூபரை அறைந்த பிக்பாஸ் நடிகை – வைரலாகும் வீடியோ.

0
697
sreekanth
- Advertisement -

யூடியூபரை நடுரோட்டில் பிக்பாஸ் நடிகை அறைந்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தெலுங்கு மொழியில் குணச்சித்திர நடிகையாக திகழ்பவர் நடிகை கராத்தே கல்யாணி. சங்கர்தாதா எம்.பி.பி.எஸ், லீலா மஹால் சென்டர், சத்ரபதி, நேனு லோக்கல், குண்டூர் டாக்கீஸ் உட்பட பல படங்களில் கல்யாணி நடித்து இருக்கிறார். மேலும், இவர் தெலுங்கில் கூட பல சீரியல்களில் நடித்து இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கூட கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற்று இருந்தார் கல்யாணி.

-விளம்பரம்-

கடந்த வருடம் தான் இவர் பாஜகவில் இணைந்தார். பின் சமீப காலமாக சமூக வலை தளங்களில் ஏதாவது கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கி வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார் கல்யாணி. இந்த நிலையில் யூடியூபரை இவர் அறைந்த சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அது என்னவென்றால், பிராங்க் வீடியோக்கள் மூலம் யூடியூபில் பிரபலமானவர் ஸ்ரீகாந்த் ரெட்டி.

இதையும் பாருங்க : அப்போ இதெல்லாம் என்ன ? பீஸ்ட்டை கலாய்த்த வட இந்தியர்களை பாலிவுட் படங்களை வைத்தே பதிலடி கொடுக்கும் தமிழ் ரசிகர்கள்.

- Advertisement -

யூடியூபர் ஸ்ரீகாந்த் ரெட்டி

இவர் அப்பகுதியில் சமூக வலைத்தளங்களில் படு ஃபேமஸ் என்று சொல்லலாம். கடந்த வியாழக்கிழமை அன்று ஹைதராபாத் அருகிலுள்ள யூசுப்குடா பகுதிக்கு யூடியூபர் ஸ்ரீகாந்த் ரெட்டி. இவரை கண்டதுமே அங்கு வந்த பிரபல தெலுங்கு நடிகை கல்யாணி ஆத்திரம் அடைந்து பேசி இருக்கிறார். அப்போது அவர் பெண்களை ஏன் யூடியூப் சேனலில் தவறாக பேசுகிறாய்? என்று கேட்டு இருக்கிறார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் அதிகமாகி இருந்தது.

கன்னத்தில் அறைந்த நடிகை :

பின் வாக்குவாதம் முற்றி ஆத்திரமடைந்த கல்யாணி திடீரென்று யூடியூபர் ஸ்ரீகாந்த் ரெட்டியை கன்னத்தில் அறைந்து இருக்கிறார். இதை எதிர்பார்க்காத யூடியூபர் ஸ்ரீகாந்த் ரெட்டியும் கோபத்தில் கல்யாணியை அறைந்து இருக்கிறார். மேலும், இந்த சண்டையில் ரெட்டியின் சட்டை கிழிந்தது. நடு ரோட்டிலேயே இருவரும் அடித்துக்கொண்டதை அக்கம்பக்கத்தினர் பார்த்து அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

பதிலுக்கு அறைந்த யூடுயூபர் :

அது மட்டுமில்லாமல் இதை கல்யாணியும், அந்த யூடியூபர் ஸ்ரீகாந்த் ரெட்டியும் தங்கள் செல்போன்களில் வீடியோவாக எடுத்துக் கொண்டிருக்கின்றனர். பின்னர் யூடியூபர் ஸ்ரீகாந்த் ரெட்டி எஸ்.ஆர்.நகர் நகர் காவல் நிலையத்தில் கல்யாணி மீது புகார் அளித்திருந்தார். அதேபோல கராத்தே கல்யாணியும் தன்னை தாக்கியதாக கூறி ஸ்ரீகாந்த் ரெட்டி மீது போலீசில் புகார் அளித்திருக்கிறார்.

போலீசார் விசாரணை :

இதுபற்றி தற்போது போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், நடுரோட்டில் நடிகையும், யூடியூபர் ஸ்ரீகாந்த் ரெட்டி அடித்து கொண்ட வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் விமர்சித்து கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

Advertisement