பிக்பாஸில் வேற்றுமொழி பிரச்சனை – இதே விஷயத்தை மோகன்லால் எப்படி கையாண்டுள்ளார் பாருங்க. வைரலாகும் வீடியோ

0
607
kamal
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிறமொழி பேசியதற்கு கமலஹாசன்- மோகன்லால் கையாண்டிருக்கும் விதம் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகிவருகிறது . விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி தற்போது ஐந்தாவது வாரம் தொடங்கி இருக்கிறது. மேலும், இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஜிபி முத்து, அசீம், அசல், ராபர்ட், ராமசாமி, ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி சாந்தி, விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவாஷினி, சிவின் கணேசன் என 20 பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

பலர் புது முகங்களாக இருக்கிறார்கள். இந்த முறை நிகழ்ச்சியில் பல மாற்றங்களை பிக் பாஸ் கொண்டு வந்து இருக்கிறது. பின் முதல் வாரத்திலேயே வைல்ட் கார்ட் எண்ட்ரியாக மைனா நந்தினி வந்து இருக்கிறார்.
பின் வழக்கம் போல் போட்டியாளர்கள் மத்தியில் கலவரம், சண்டைகளும் தொடங்கி நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. மேலும், இந்த நிகழ்ச்சியில் அதிக ரசிகர் பட்டாளம் கொண்ட ஜிபி முத்து குடும்பத்தின் மீது இருந்த ஏக்கத்தின் காரணமாக தாமாகவே நிகழ்ச்சியை விட்டு வெளியேறி இருந்தார்.

- Advertisement -

பிக் பாஸ் சீசன் 6:

இவரை தொடர்ந்து முதல் எவிக்சனில் மெட்டிஒலி சாந்தி வெளியேறி இருந்தார். பின் இரண்டாவது எவிக்சனில் அசல் வெளியேறி இருந்தார். கடந்த வாரம் குறைந்த வாக்குகள் பெற்று ஷெரினா வெளியேறி இருக்கிறார். இது ஒரு பக்கம் இருக்க, நிகழ்ச்சியில் பிற மொழிகளைப் பேசும் சர்ச்சை பிக் பாஸ் 1 தொடக்கத்தில் இருந்து இருக்கிறது. பெரும்பாலும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் ஆங்கிலத்தில் பேசுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

நிகழ்ச்சியில் பேசும் மொழி குறித்த சர்ச்சை:

முதல் சீசனில் இருந்தே பிக் பாஸும் இது குறித்து கண்டித்து வருகிறார். இருந்தாலும் ஒவ்வொரு சீசனிலும் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் வருகிறார்கள். அந்த வகையில் தமிழில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் செரினாவும், ஆயிஷாவும் அடிக்கடி மலையாளத்தில் பேசி இருந்தார்கள். இதுகுறித்து பிக் பாஸ் எச்சரிக்கை விடுத்திருந்தது. இருந்தாலும், இவர்கள் தொடர்ந்து மலையாளத்தில் தான் பேசியிருந்தார்கள்.

-விளம்பரம்-

கமல் செய்த செயல்:

நேற்று நிகழ்ச்சியில் இருந்து செரினா வெளியேறி இருந்தார். அதற்கு மலையாளத்தில் அவருடைய பெயரை கமலஹாசன் எழுதிக் காட்டி இருந்தார். இதற்கு காரணம் இனிமேல் நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் தமிழில் மட்டும் பேச வேண்டும் என்பதை பதிய வைப்பதற்காக கமலஹாசன் இதை செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மலையாளத்தில் மோகன்லால் இந்த விஷயத்தை கையாண்டிருக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் மொழியை போலவே பிற மொழிகளிலும் பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

மோகன்லால் செய்த செயல்:

அந்த வகையில் மலையாளத்திலும் பிக் பாஸ் நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியை மோகன்லால் தொகுத்து வழங்கி வருகிறார். நிகழ்ச்சியில் ஆங்கிலத்தில் தொடர்ந்து பேசி இருந்த ஒரு போட்டியாளரை மோகன்லால் கடுமையாக கண்டித்து இருக்கிறார். பின் அவர், இது ஒரு மலையாள நிகழ்ச்சி. ஆங்கிலம் மற்றும் மற்ற மொழிகள் பேசுவதற்கு அனுமதி இல்லை. மலையாளம் பேசுவதாக இருந்தால் நீங்கள் இங்கே போட்டியாளராக இருக்கலாம். இல்லையென்றால்,நிகழ்ச்சியை விட்டு வெளியேறி விடுங்கள் என்று கோபத்துடன் பேசி இருக்கிறார்.

Advertisement