படம் தயாரித்து பணத்தை இழந்து தற்போது வாடகை வீட்டில் வசித்து வரும் கஞ்சா கருப்பு – மாச வாடகை மட்டும் எவ்ளோ தெரியுமா ?

0
632
kanja
- Advertisement -

‘சொந்த வீடு போனாலும் வாடகைக்கு வீட்டில் சந்தோஷமாக இருக்கிறேன்’ என்று உருக்கமாக கஞ்சா கருப்பு அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான காமெடி நடிகராக திகழ்ந்தவர் கஞ்சா கறுப்பு. இவருடைய உண்மையான பெயர் கறுப்பு ராஜா. இவர் மதுரையை சேர்ந்தவர். இயக்குனர் பாலா இயக்கத்தில் விக்ரம், சூர்யா நடித்து மிகப்பெரிய அளவில் சூப்பர் ஹிட் கொடுத்த பிதாமகன் என்ற படத்தில் கஞ்சா விற்பவராக கறுப்பு நடித்திருந்தார்.

-விளம்பரம்-

இதனால் அவரை அனைவரும் கஞ்சா கருப்பு என்று அழைக்க ஆரம்பித்தார்கள். அதனைத் தொடர்ந்து இவர் ராம், சிவகாசி, சண்டக்கோழி, திருப்பதி, தாமிரபரணி, பருத்திவீரன், அழகிய தமிழ்மகன் போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். இதன் பின் இவர் தான் சம்பாதித்த பணத்தை வைத்து படம் ஒன்றை தயாரித்து இருந்தார். இவர் சினிமா துறையில் பல படங்களில் நடித்து சம்பாதித்த பணத்தை தயாரிப்பில் இறக்கி இருந்தார்.

- Advertisement -

கஞ்சா கருப்பு திரைப்பயணம்:

ஆனால், மொத்த பணத்தையும் இழந்த நடிகர்கள் வரிசையில் காமெடி நடிகர் கஞ்சா கருப்புவும் ஒன்று ஆனார். இவர் ‘வேல்முருகன் போர்வெல்’ என்று படத்தை தயாரித்து இருந்தார். இந்த படம் 2013 ஆம் ஆண்டு வெளியானது கூட பலருக்கும் தெரியாது. இதனால் மனம் உடைந்த கஞ்சா கறுப்பு கொஞ்ச காலம் சினிமாவில் தலைகாட்டாமல் இருந்தார். பின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் இவர் மக்கள் மத்தியில் மீண்டும் பிரபலமானார்.

கஞ்சா கருப்பு நடிக்கும் படங்கள்:

இதனைத் தொடர்ந்து இவர் படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற ஓங்காரம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கஞ்சா கருப்பு கலந்து கொண்டு இருந்தார். அப்போது அவர் ஓங்காரம் பட நடிகையை தகாத வார்த்தைகளால் தீட்டி இருந்தார். இது சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. தற்போது இவர் படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் கஞ்சா கருப்பு பேட்டி ஒன்று அளித்திருந்தார்.

-விளம்பரம்-

கஞ்சா கருப்பு வீடு:

அதில் அவர் கூறி இருந்தது, கண்ட கண்டவர்கள் எல்லாம் சென்னையில் சுற்றிக் கொண்டிருக்கும்போது இந்த கஞ்சா கருப்பு சுத்த கூடாதா? சென்னையில் தான் இருக்கிறேன். என்னுடைய பழைய வீடான ‘பாலா – அமீர்’ இல்லத்தை கொடுத்து விட்டேன். இப்போ மாதம் 30,000 ரூபாயில் வாடகை வீட்டில் இருக்கிறேன். சொந்த வீடு போனாலும் வாடகை வீட்டில் சந்தோஷமாகத்தான் நான் இருக்கிறேன். தற்போது நான் மலையாளத்தில் இரண்டு படங்களில் நடித்து முடித்து இருக்கிறேன்.

கஞ்சா கருப்பு நடித்துள்ள படங்கள்:

பின் அமீர் அண்ணன் நடிக்கிற நாற்காலி, சீனு ராமசாமி அண்ணனின் இடிமுழக்கம் போன்ற படங்களில் எல்லாம் நடித்திருக்கிறேன். இந்த படங்கள் எல்லாம் ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது. அடுத்து பரபரப்பான அரசியல் கதைக்களம் கொண்ட ஒரு படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். இந்த படத்தின் மூலம் எனக்கு ஒரு பெரிய பெயர் வாங்கிக் கொடுக்கும்ன்னு எதிர்பார்க்கிறேன் என்று கூறியிருந்தார்.

Advertisement