வனிதா உங்களுக்காக தான் காத்துட்டு இருகாங்க, நீங்க பிக் பாஸ் போங்க ஜாலியா இருக்கும் – ரசிகரின் கமென்டிற்கு கஸ்தூரி பதில்.

0
473
vanitha
- Advertisement -

ஒரு புது வித கான்செப்டில் விஜய் டிவி அறிமுகம் படுத்தி உள்ள நிகழ்ச்சி பிக் பாஸ் அல்டிமேட். அனைவரும் எதிர்பார்த்து காத்து கொண்டு இருந்த பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி சில தினங்களுக்கு முன் தான் கோலாகலமாக துவங்கியது. தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் வேறு. இந்த பிக் பாஸ் வேறு. இந்த நிகழ்ச்சி டிவி ஷோ போல ஒரு மணி நேரம் இல்லாமல் 24 ஒரு நேரமும் ஒளிபரப்பி வருக்கின்றனர். இதில் பிக் பாஸ் சீசன் 1முதல் 5 வரையிலான போட்டியாளர்கள் கலந்துகொண்டு இருக்கின்றனர். மேலும், கடந்த 2 சீசன்களை போல போட்டியாளர்கள் அனைவரும் கொரோனா தொற்று கட்டுப்பாடுகளுடன், போட்டியாளர்கள் இரண்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு தனிமைப்படத்தப்பட்ட பின்னரே பிக் பாஸ் வீட்டிற்குள் வைக்கப்பட்டனர்.

-விளம்பரம்-
கஸ்தூரியை வனிதாவுடன் ஒப்பிட்ட அபி.! வனிதாவின் ரியாக்க்ஷனை பாருங்க.! - Tamil  Behind Talkies

இதில் வனிதா, சினேகன், சுஜா வருணி, அபிநய், அனிதா, பாலாஜி முருகதாஸ், தாடி பாலாஜி, சுருதி, தாமரை செல்வி, ஷாரிக், நிரூப், ஜூலி, அபிராமி, சுரேஷ் சக்கரவர்த்தி ஆகிய 14 பேர் கலந்துகொண்டனர். மேலும், முதல் நாளே நாமினேஷன் தொடங்கப்பட்டது. அதோடு பிக்பாஸ் முதல் சீசனில் கலந்துகொண்டு ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த ஓவியா பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என்று பெரும் எதிர்பார்ப்புகளுடன் ரசிகர்கள் இருந்தார்கள்.

- Advertisement -

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி குறித்து கஸ்தூரி சொன்னது:

ஆனால், அவர் கலந்து கொள்ளவில்லை. அதேபோல் கஸ்தூரியும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் கலந்து கொள்ள இருக்கிறார் என்று சோசியல் மீடியாவில் பேசப்பட்டது. ஆனால், அவரும் கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில் இது குறித்து நெட்டிசன் ஒருவர் நடிகை கஸ்தூரி இடம் ‘ஏன் நீங்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை? வைல்ட் கார்டு எண்ட்ரியில் உள்ளே செல்ல முயற்சி செய்யுங்கள் என்றெல்லாம் கூறி கேட்டிருந்தார். அதற்கு கஸ்தூரி கூடியிருப்பது,

நெட்டிசன் கேட்ட கேள்விக்கு கஸ்துரி அளித்த பதில்:

எனக்கு குடும்பம் மற்றும் பூர்த்தி செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்கின்றன. நச்சு தன்மைக்கு எப்போதும் நேரமில்லை. பணம் கிடைக்கிறது என்பதற்காக போலியான டிவி நிகழ்ச்சியின் பின்னால் ஓடுவதற்கு நிச்சயமாக நேரமில்லை. உங்கள் திரிக்கப்பட்ட எதிர்பார்ப்புகளை வேறு இடத்திற்கு கொண்டு செல்லவும் என்று கூறியிருந்தார். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் வைல்டு கார்ட் போட்டியாளராக கலந்து கொண்டார். டுவிட்டரில் எல்லோரையும் வறுத்து எடுத்த கஸ்தூரி பிக் பாஸ் வீட்டில் புள்ள பூச்சியாக இருந்தார்.

-விளம்பரம்-

கஸ்தூரி-வனிதா சண்டை:

அதிலும் இவருக்கும், வனிதாவுக்கும் ஏற்பட்ட பிரச்சினையில் இவரால் வனிதாவிற்கு ஈடுகொடுக்க முடியவில்லை. மேலும், இவருக்கு பிக்பாஸில் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கவில்லை என்பதால் சீக்கிரமாகவே வெளியேற்றப்பட்டார். தமிழ் சினிமா உலகில் 90 காலகட்டங்களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் நடிகை கஸ்தூரி. இவர் ஆத்தா உன் கோவிலிலே என்ற படத்தின் மூலம் தான் கதாநாயகியாக சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதற்கு பிறகு பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து இருந்தார்.

கஸ்தூரி திரை பயணம்:

பிறகு சினிமாவில் பட வாய்ப்புகள் குறைய தொடங்கிய உடன் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். மேலும், தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக திகழ்ந்த பிரபு, சத்யராஜ், கார்த்தி போன்ற பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இடைப்பட்ட காலத்தில் சினிமாவில் இருந்து காணாமல் போன நடிகை கஸ்தூரி, சிவா நடிப்பில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான ‘தமிழ் படம்’ படத்தில் குத்து விளக்கு என்ற பாடலுக்கு நடனமாடியிருந்தார். அந்த பாடல் மூலம் தமிழ் சினிமாவில் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்தார்.

Advertisement