அப்பா மகன் காம்போவில் தோல்வியடைந்த படம் மகான், கடைசியா அப்பா மகன் கம்போல ஹிட் கொடுத்தது இவங்க தான். பிக் பாஸ் நடிகை ட்வீட்.

0
453
mahaan
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் விக்ரம். தற்போது விக்ரம் நடிப்பில் வெளியாகி உள்ள படம் மகான். இந்த படத்தில் துருவ் விக்ரம் சேர்ந்து நடித்து உள்ளார். படத்தில் அப்பா-மகன் இருவருமே கதாநாயகர்களாக நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருக்கிறார். மேலும், இந்த படத்தில் இவர்களுடன் வாணிபோஜன், பாபி சிம்ஹா, சிம்ரன், தீபக் பரமேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். மேலும், இந்த படம் ஆக்ஷன் நிறைந்த கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட படமாக உருவாகி உள்ளது. படத்தில் சந்தோஷ் நாராயணன் இசை அமைப்பாளராக பணிபுரிந்துள்ளார்.

-விளம்பரம்-

மூன்று மொழிகளில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கும் மகான் படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மதுவினால் ஏற்படும் பிரச்சினைகளையும் விளைவுகளையும் படத்தில் அழகாக காண்பித்திருக்கிறார்கள். நீண்ட இடைவெளிக்குப்பிறகு கார்த்திக் சுப்புராஜின் மகான் படம் ரசிக்க வைத்திருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் இந்த படத்தில் வாணி போஜன் நடித்து இருக்கிறார். இருந்தாலும் அவரது ஒரு காட்சிகள் ஒன்று கூட படத்தில் இடம்பெறவில்லை.

- Advertisement -

மகான் படம் கஸ்தூரி பதிவிட்ட டீவ்ட்:

அதற்கு பதிலாக படத்தின் ஆரம்பத்தில் வாணி போஜன் பெயரை குறிப்பிட்டு நன்றி மட்டும் தெரிவிக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த படம் குறித்து பிரபலங்கள் பலரும் நல்ல விதமாக கூறி இருந்தார்கள். இந்த நிலையில் நடிகை கஸ்தூரி மகான் படம் தோல்வி அடைந்தது என்று டுவிட்டரில் விமர்சித்திருக்கிறார். தற்போது இந்த பதிவு சோஷியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கஸ்தூரி டீவ்ட்டரில் கூறியிருப்பது, அப்பா- மகன் சேர்ந்து நடித்தால் படம் ஓடாது என்கிற விஷயத்தை இந்த படம் உடைக்கவில்லை.

டீவ்ட்டரில் கஸ்தூரி கூறியது:

பிரியமுடன் படம் மட்டும் தான் என்று நினைக்கிறேன் . தளபதி விஜய் மற்றும் எஸ்.ஏ.சந்திரசேகர் தான் அதை துவங்கி வைத்தனர். ஆனாலும், ஒரு அப்பா மகனாக இல்லை. நிஜ அப்பா மகன் ஒன்றாக நடித்து ஹிட் ஆன தமிழ் படம் எதாவது இருந்தால் சொல்லுங்கள் என அவர் ரசிகர்களை கேள்வி கேட்டு இருக்கிறார். இப்படி கஸ்தூரி பதிவிட்ட பதிவிற்கு ரசிகர்களும், நெட்டிசன்களும் பல்வேறு படங்களை கமெண்டுகளை கூறி வருகின்றனர். தற்போது இது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

-விளம்பரம்-

கஸ்தூரி திரைப்பயணம்:

தமிழ் சினிமா உலகில் 90 காலகட்டங்களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் நடிகை கஸ்தூரி. இவர் ஆத்தா உன் கோவிலிலே என்ற படத்தின் மூலம் தான கதாநாயகியாக சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதற்கு பிறகு இவர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து இருந்தார். மேலும், தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக திகழ்ந்த பிரபு, சத்யராஜ், கார்த்தி போன்ற பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். பிறகு சினிமாவில் பட வாய்ப்புகள் குறைய தொடங்கிய உடன் இவர் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

கஸ்தூரியின் ரீ என்ட்ரி:

பின் இடைப்பட்ட காலத்தில் சினிமாவில் இருந்து காணாமல் போன நடிகை கஸ்தூரி, சிவா நடிப்பில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான ‘தமிழ் படம்’ குத்து விளக்கு என்ற பாடலுக்கு நடனமாடியிருந்தார். அந்த பாடல் மூலம் தமிழ் சினிமாவில் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்தார். அதன் பின்னர் பல்வேறு பட வாய்ப்புகள் கஸ்தூரிக்கு வந்த வண்ணம் இருந்தது. மேலும், இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் வைல்டு கார்ட் போட்டியாளராக கலந்து கொண்டார்.

Advertisement