வனிதாவின் பொய்கள் விஜய் டிவி contentக்கு வேணும்னா பயன்படும், போலீஸிடம் வியாபாரமாகுமா? வனிதாவை வச்சி செய்த காஸ்தூரி.

0
381
- Advertisement -

பிக் பாஸ் பிரபலம் வனிதா விஜயகுமார் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தி இருக்கும் சம்பவம் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது. இது தொடர்பாக வனிதா புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், எனது தாக்குதலை தைரியமாக பதிவு செய்கிறேன். பிக் பாஸ் நிகழ்ச்சி என்பது தொலைக்காட்சியில் ஒரு கேம் ஷோ மட்டுமே. இதை கடந்து செல்ல எனக்கு தகுதி இல்லை.

-விளம்பரம்-

கொடூரமாக தாக்கப்பட்டது யாரென்று கடவுளுக்கு மட்டுமே தெரியும். பிரதீப் ஆண்டனி ஆதரவாளர் என்று அழைக்கப்பட்டார். எனது பிக் பாஸ் தமிழ் விமர்சனத்தை முடித்துவிட்டு இரவு உணவு சாப்பிட்டுவிட்டு என் காரில் இறங்கி நடந்தேன். நான் என் சகோதரி சௌமியா வீட்டில் காரை விட்டு வந்து வந்த போது அந்த இடம் இருட்டாக இருந்தது. எங்கிருந்தோ ஒரு மனிதன் வந்து ரெட் கார்டு குடுக்ரீங்களா.

- Advertisement -

வனிதா சர்ச்சை :

நீ சப்போர்ட் பண்றியா என சொல்லி என் முகத்தில் பலமாக தாக்கி விட்டு தப்பி ஓடி விட்டார் . என் முகத்தில் ரத்தம் வழிந்தது. எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது. நள்ளிரவு 1 மணியளவில் அருகில் யாரும் இல்லை .நான் என் சகோதரியை கீழே வரும்படி அழைத்தேன். இந்த சம்பவத்தைப் காவல் நிலையத்தில் தெரிவிக்கும்படி என்னை வற்புறுத்தினாள். ஆனால், இந்த சம்பவம் பற்றி சொன்னால் என்ன மாதிரி நடவடிக்கை எடுப்பார்கள் என்று எனக்கு தெரியும். அதனால் எனக்கு நம்பிக்கை இல்லை.

வனிதா பதிவு:

நான் முதலுதவி செய்துவிட்டு கோபத்துடன் வீட்டை விட்டு வெளியேறி தாக்கியவரை தேடினேன். நான் திரையில் தோன்றும் உடல் நிலையில் இல்லாததால் எல்லாவற்றிலிருந்தும் ஓய்வு எடுத்துக்கொள்கிறேன் என்று கூறி இருந்தார். இதை பார்த்து பலரும் பிரதீப்பை விமர்சித்து பேசி இருக்கிறார்கள். ஆனால், சிலர் வனிதாவுக்கு எதிராக குரல் கொடுத்து இருக்கிறார்கள். பின்னர் இந்த விவகாரம் குறித்து பிரதீப், வனிதாவிடம் எனக்கு இதில் சமந்தம் இல்லை என்று மன்னிப்பு கேட்டதாக கூறப்படுகிறது.

-விளம்பரம்-

கஸ்தூரி பதிவு:

இந்நிலையில் இது தொடர்பாக நடிகை கஸ்தூரி ட்விட் போட்டு இருக்கிறார். அதில் அவர், அடிச்சவன் யாரோ, அதுக்கு பிரதீப் எப்படி பொறுப்பாக முடியும். தன் reviewவால் வந்த வினை. போலீசுக்கும் போகமாட்டார். வனிதாவின் ருசிகரமான பொய்கள் யூடியூப் க்கும் விஜய் டிவி க்கும் content க்கு வேண்டுமானால் பயன்படும். போலீஸிடம் வியாபாரமாகுமா. I should show sympathy, but சனியன் இந்த நேரம் பார்த்து எனக்கு மதுமிதா கையை வெட்டிக்கொண்டு நின்ற பொழுதிலும் நெஞ்சில் ஈரமே இல்லாமல் வனிதா அண்ட் கோ அவரை மேலும் மேலும் gherao செய்தது நினைவுக்கு வருகிறது. It’s only a game அப்போ தெரியலையா? Nobody deserves violence, not just you என்று கூறி இருக்கிறார்.

பிக் பாஸ் மதுமிதா:

தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான காமெடி நடிகையாக திகழ்பவர் மதுமிதா. இவர் தமிழ் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டிருந்தார். அந்த சீசனில் வனிதா, கஸ்தூரி இருந்தார்கள். பிக் பாஸ் வீட்டில் தொடர்ந்து பிரச்சினைகள் சென்று கொண்டிருக்கும்போது திடீரென்று நடிகை மதுமிதா தற்கொலை முயற்சியில் தன்னுடைய கையை கத்தியால் அறுத்து இருந்தது மிகப்பெரிய அளவில் பரபரப்பு ஏற்படுத்தி இருந்தது. அப்போது மதுமிதாவிற்கு ஆதரவாக யாருமே நிற்கவில்லை. அதற்குப்பின் நிகழ்ச்சியில் இருந்து மதுமிதா வெளியேறினார். தான் தற்கொலை செய்ததன் காரணம், நிகழ்ச்சியில் எல்லோரும் சேர்ந்து குரூப் ராகிங் செய்து கொடுமைப்படுத்தினார்கள். இதனால் மன உளைச்சல் ஆளாகி கை அறுத்து கொண்டேன் என்றெல்லாம் கூறி இருந்தார்.

Advertisement