சமையல் செஞ்சி, துணி துவச்சி, ஷூ மாட்டிவிட்டது யாரு – பிராமணர் சங்கம் மாநாட்டில் கஸ்தூரி ஆவேசம். வைரலாகும் வீடியோ.

0
318
- Advertisement -

பிராமணர் சங்கம் மகளிர் அணி மாநாட்டில் நடிகை கஸ்தூரி ஒருமையில் பேசி இருப்பது தான் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை கிளப்புகிறது. திருச்சியில் தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் மகளிர் அணி மற்றும் இளைஞர் அணி மாநாடு நடைபெற்றிருக்கிறது. இந்த மாநாட்டில் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டு கூறி இருப்பது, எல்லோரும் தமிழ்நாட்டில் பிராமணர்களை தமிழனே இல்லை, நீ தமிழனே இல்லை, எதற்கு சமஸ்கிருதத்தில் பூஜை செய்கிறீர்கள் என்று சொல்கிறார்கள்.

-விளம்பரம்-

ஈழத் தமிழர்கள் இல்லாத நாடே கிடையாது. கனடா, ஜெர்மனி, யூரோப், யூகே வில் நான் பார்த்திருக்கிறேன். அங்கு ரொம்ப அழகாக வேதம் முழக்கத்தோடு கோவிலில் கும்பாபிஷேகம் செய்கிறார்கள். அது பார்க்க பெருமையாக இருக்கிறது. அழகான தூய சமஸ்கிருதத்தில் ஒரு முறை, அழகான தூய தமிழில் ஒரு முறை என மந்திரம் சொல்கிறார்கள். வைதீக பிராமணர்களுக்கு அவர்கள் கொடுக்கும் மரியாதை எல்லாம் ஒரே சமம்.

- Advertisement -

மாநாட்டில் கஸ்தூரி ;

எல்லோரும் சேர்ந்து ஒரு சமபந்தி போஜனமாக தான் சாப்பிடுகிறார்கள். நான் தெரியாமல் தான் கேட்கிறேன், ஈழத் தமிழர்களை விட நீங்கள் எல்லாம் தமிழர்களாடா? நீங்கள் தமிழர்களா? ஆரிய வந்தேறி என சொல்லும் நீங்கள் எல்லாம் முதலில் தமிழர்களா? ஈழத் தமிழரை விட உங்களுக்கு எல்லாம் தமிழ் பற்று அதிகமா? அவர்களுக்குத் தெரிந்த ஆன்மீகமும், அறமும் வேறு யாருக்கும் தெரியாது. அவர்களிடம் பிராமண சமுதாயத்தை மதிக்கும் பண்பு அதிகமாக இருக்கிறது.

பிராமணர்கள் குறித்து சொன்னது:

பிரிட்டிஷாருக்கு சேவகம் செய்தவர்கள் துபாஷியாக இருந்து மினிஸ்டராக இருந்தவர்கள் பிராமணர்கள் என்று சொல்வார்கள். பிரிட்டிஷ் படையில் இருந்தவர்கள் யார்? பிரிட்டிஷருக்கு சமையல் செய்து போட்டது, துணி துவைத்து கொடுத்தது, ஷூ மாட்டி விட்டது, பயிர் செய்து கொடுத்தது என எல்லா சேவைகளையும் செய்தது உங்களுடைய மூதாதையர்கள் தானே. ஆனால், அவர்களுக்கு அறிவுரை சொன்னதாக பிராமணர்கள் மீது பழி போடுகிறீர்கள் ஒத்துக் கொள்கிறோம்.

-விளம்பரம்-

பிற சமூகம் குறித்து சொன்னது:

ஆனால், சுதந்திரமே வேண்டாம் என்று ஒருவர் கூறியிருக்கிறார். கேட்டால், நாங்கள் எல்லாம் பிற்படுத்தவர்கள் என்று கூறுகிறார்கள். எப்படி பிற்படுத்தவர்கள், நாயக்கர் சமூகம் சுதந்திரமானது. பிற்படுத்தப்பட்ட சமூகம் கிடையாது. எல்லாம் தர்ணா பண்ணி வாங்கிய சர்டிபிகேட். எத்தனையோ சமூகம் அந்த மாதிரி இருக்கிறது. கவுண்டர்கள் எல்லாம் நிலச் சுவான்தார்கள். இப்போது வன்னியர்கள் போராட்டம் பண்ணி ரெப்ரஷன் பண்ணி வாங்குகிறார்கள்.

நெட்டிசன்கள் கண்டனம்:

தமிழ்நாட்டில் நியாயமாக பார்த்தால் மார்வாடிகளுக்கு சைவப் பிள்ளைமார்களும் பிராமணர்களும் தான் மைக்ரோ மைனாரிட்டி. நீங்கள் தான் சண்டை போட வேண்டும், சண்டை போடுங்கள். ரௌத்திரம் பழகு. பிராமணர்கள் மீது தொடர்ந்து சுமத்தப்பட்டிருக்கும் பொய் பிரச்சாரங்களை குற்றசாட்டுகளை தகர்த்தெறிவோம். இதையே நாம் புத்தாண்டின் நோக்கமாக வைத்துக் கொள்வோம் என்றெல்லாம் ஆவேசமாக பேசி இருக்கிறார். இப்படி கஸ்தூரி பேசியிருந்தது சோசியல் மீடியாவில் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. பலருமே கஸ்தூரி ஒருமையில் பேசி இருக்கிறார் என்று கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement