ஹய்யோ, ஹய்யோ. நான் கிழவி அப்போ என்னை விட 5 வயசுல் மூத்தவ அஜித் ? விளாசிய பிக் பாஸ் 3 நடிகை.

0
1620
ajith
- Advertisement -

தமிழ் சினிமாவில் மிகவும் சர்ச்சைக்குரிய நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகை கஸ்தூரி.90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகர்களுடன் நடித்த கஸ்தூரி, தற்போது ஒரு சில படங்களில் அயிட்டம் பாடலுக்கு நடனமாடி மீண்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.சமூக வலைதளத்தில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கும் நடிகை கஸ்தூரி அடிக்கடி சர்ச்சையாக விடயங்களை பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார்.

-விளம்பரம்-

அந்த வகையில் கடந்த சில மாதத்திற்கு முன்னர் ரஜினி, கமல், விஜய், அஜித் என்று அனைத்து ரசிகர்களையும் வம்பிலுத்து வந்தார். நடிகை கஸ்தூரிக்கும் அஜித் ரசிகர்களுக்கும் கடந்த சில மாதங்களாகவே டுவிட்டரில் பிரச்சினை இருந்து வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே.அதே போல சில ரசிகர்கள் எல்லை மீறியதையடுத்து அஜீத் மற்றும் அவரது மேனேஜருக்கு கஸ்தூரி டுவிட்டரின் மூலமே புகார் அளித்தார் என்பதும் தெரிந்ததே.

- Advertisement -

அஜித்தை பற்றி ட்வீட் செய்ததால் கடுப்பான கஸ்தூரி #DirtyAjithfans என்ற ஹேஷ் டேக்கை பயன்படுத்தி தன்னை விமர்சிக்கும் அஜித் ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்திருந்தார். இப்படி ஒரு நிலையில் பிரபுவுடன் கஸ்தூரி நடித்த பழைய வீடியோ ஒன்றை ட்விட்டரில் பகிர்ந்திருந்த செய்த அஜீத் ரசிகர் ஒருவர் ’இது நம்ம கஸ்தூரி கிழவிதானே! அந்த காலத்தில் சரியான ஃபிகரா இருந்திருப்பார் போல’ என்று பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதில் அளித்த கஸ்தூரி, ‘எதுக்கு தேவையில்லாம ஆணிய புடுங்குவானேன்? அதை எனக்கு cc பண்ணுவானேன்? இந்த பொழப்பு உங்களுக்கு தேவையா? அஜித் அவர்கள் கேட்டாரா? அவர் பேரை சொல்லிக்கிட்டு அசிங்கமா பேசுங்கன்னு? இதுல காமெடி என்னன்னா, கஸ்தூரி ‘கிழவி’, அஜித்தை விட ஐந்து வயது குறைந்தவர்’ ஹைய்யோ ஹையோ’ என்று கூறியுள்ளார். இதில் கவனிக்கப்படவேண்டிய விஷயம் என்னவென்றால் அஜித் மற்றும் கஸ்தூரி பிறந்த தினம் மே 1 தான்.

-விளம்பரம்-

Advertisement