மிக்ஸ்ச்சர் பார்ட்டிகளையும் கம்பெனி ஆர்டிஸ்ட்ங்களையும் பாதுகாத்து மத்தவங்களுக்கு கல்தா குடுக்கறதுக்கு பேரு என்ன தெரியுமா ? வெளுத்து வாங்கிய முன்னாள் போட்டியாளர்.

0
1183
sanam
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் 63 நாட்களை நிறைவு செய்து இருக்கிறது. இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா ஆகியோர் வெளியேறி இருந்த நிலையில் நேற்று (டிசம்பர் 6) சனம் ஷெட்டி வெளியேற்றப்பட்டு இருந்தார். கடந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் ஆரி, ஆஜீத், அனிதா, ரம்யா பாண்டியன், ஷிவானி, நிஷா, சனம் ஷெட்டி ஆகியோர் இடம்பெற்றனர். இந்த வாரம் ஆஜீத், ஷிவானி, நிஷா, அனிதா ஆகிய யாரவது 4 பேரில் ஒருவர் தான் நிச்சயம் வெளியேறுவார்கள் என்று ரசிகர்கள் பலரும் எதிர் பார்த்தனர்.

-விளம்பரம்-

இந்த நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் சனம் ஷெட்டி வெளியேற்றப்பட்டு இருந்தார்.மற்ற போட்டியாளர்களின் வெளியேற்றத்தை சனம் ஷெட்டியின் வெளியேற்றம் தான் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதற்கு முக்கிய காரணமே சனம் ஷெட்டியை விட நிஷா, ஷிவானி, ஆஜித் போன்றவர்கள் எந்த விதத்தில் சிறந்த போட்டியாளர்களாக இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. சனம் ஷெட்டி வெளியேறியதையடுத்து ட்விட்டரில் சனம் ஷெட்டி ஹேஷ் டேக் ட்ரெண்டிங்கில் கூட வந்தது.

- Advertisement -

சனம் ஷெட்டி வெளியேறியதை தொடர்ந்து ரசிகர்கள் மட்டுமல்லாது பல்வேறு பிரபலங்கள் கூட தொடர்ந்து சனம் ஷெட்டிக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். அந்த வகையில் நடிகையும் பிக் பாஸ் சீசன் 3 போட்டியாளருமான கஸ்தூரியும், சனம் ஷெட்டி வெளியேற்றத்திற்கு பின்னர் ட்வீட் செய்திருக்கிறார். அதில்,நியாயமான நேர்மையான முறையில் மக்கள் வாக்குகளை மட்டுமே நம்பி விளையாடப்படும் ஒரு Game என்று இன்னும் நம்புபவர்கள் மேடைக்கு வரவும். மிக்ஸ்ச்சர் பார்ட்டிகளையும் கம்பெனி ஆர்டிஸ்ட்ங்களையும் பாதுகாத்து மத்தவங்களுக்கு கல்தா குடுக்கறதுக்கு பேரு என்ன தெரியுமா ? என்று பதிவிட்டுள்ளார்.

நடிகை கஸ்தூரி,கடந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு போட்டியாளராக கலந்து கொண்டார். ஆனால், சென்ற வேகத்திலேயே ஒரே ஒரு வாரத்தில் வெளியேறிவிட்டார். கடந்த சில சில தினங்களுக்கு முன்னர் கூட நடிகை கஸ்தூரி, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதற்காக தனது சம்பள பாக்கி கொடுக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டி இருந்தார். ஆனால், அதற்கு பதில் அளித்த விஜய் டிவி நடிகை கஸ்தூரி பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கான சம்பளத்தை 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வழங்கப்பட்டுவிட்டது. அவருடைய GST பதிவு முறை பொருந்திப்போகாத காரணத்தால் அதை மட்டும் நிறுத்தி வைத்திருக்கிறோம். கஸ்தூரி அதற்கான ஆவணங்களை கொடுப்பதற்காக காத்திருக்கிறோம். அவை ஒப்படைத்த பின்னர் அதற்கான தொகையையும் அவரிடம் கொடுத்துவிடுவோம் என்று கூறி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement