வனிதா மேடம் யாரு கூட அடுத்து சேர போறாங்கன்ற கேள்விக்கு பதில் கிடைச்சிருச்சு – கஸ்தூரி போட்ட சர்ச்சை ட்வீட்.

0
1589
kasthuri
- Advertisement -

தமிழ் சினிமாவின் 90 காலகட்டங்களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் நடிகை கஸ்தூரி. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக திகழ்ந்த பிரபு, சத்யராஜ், கார்த்தி, சரத்குமார் என்று பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். அவ்வளவு ஏன் கமலுக்கு கூட இந்தியன் படத்தில் மகளாகவும் தங்கையாகவும் நடித்திருந்தார். தற்போது சர்ச்சைக்குரிய நடிகையாக திகழ்ந்து வருகிறார். அதற்கு முக்கிய காரணமே அம்மணி இந்த வயதில் தமிழ் படத்தில் போட்ட குத்தாட்டமும், அடிக்கடி சமூக வைத்தளத்தில் பதிவிட்டு வரும் சர்ச்சையான பதிவுகளும் தான்.

-விளம்பரம்-

சினிமா பிரபலங்கள். அரசியல் பிரபலங்கள் என்று யாரையும் பார்க்காமல் தவறு என்றால் ட்விட்டரில் தட்டிக் கேட்டவர் நடிகை கஸ்தூரி. அதே போல ட்விட்டரில் தன்னை விமர்சிப்பவர்களை உடனடியாக பதிலடியை கொடுத்துவிடுவார். இப்படி ஒரு நிலையில் தான் இவர் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்ட் போட்டியாளராக கலந்து கொண்டார். ஆனால், ட்விட்டரில் அவர் பேசிய பேச்சுக்கும் பிக்பாஸில் இவர் இருந்ததற்கும் எந்த வித சம்பந்தமும் இல்லாத போலத்தான் தோன்றியது. டுவிட்டரில் படு மாஸாக பேசிக்கொண்டிருந்த கஸ்தூரி பிக் பாஸ் வீட்டில் புஸ்ஸென்று ஆகிவிட்டார். அதிலும் இருவருக்கும் வனிதாவுக்கும் ஏற்பட்ட பிரச்சினையில் இவரால் வனிதாவிற்கு ஈடுகொடுக்க முடியவில்லை.

- Advertisement -

இருப்பினும் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பின்னரும் இவருக்கும் வனிதாவிற்கும் அடிக்கடி பிரச்சனை வந்தது. சமீபத்தில் நடிகை வனிதா, பீட்டர் பவுலை பிரிந்ததாக வீடியோ ஒன்றை போட்டிருந்தார்.அதை கூட கேலி செய்து நடிகை கஸ்தூரி ட்வீட் ஒன்றை போட்டிருந்தார். இப்படி ஒரு நிலையில் நடிகை வனிதா, பிஜேபியில் சேரப்போவதாக சமூக வலைதளத்தில் ஒரு செய்தி வைரலாக பரவியது. இதுகுறித்து ட்வீட் போட்டுள்ள கஸ்தூரி, vanitha மேடம் யாரு கூட அடுத்து சேர போறாங்கன்ற கேள்விக்கு பதில் கிடைச்சிருச்சு!!! ஒருமையில்லை, பன்மை !

அடுத்து இணைவது காதலருடனில்லை, கட்சியிலாம். ஏற்கனவே நோட்டாவுக்கு கம்மியா வோட்டு வாங்குற கட்சி…மேடம் பிரச்சாரம் பண்ணா எப்பிடி இருக்கும்? வனிதாவுக்கு பின்னாடி பல பேர் இருக்காங்கன்னு சொன்னதை தப்பா புரிஞ்சிக்கிட்டாங்களா ஒருவேளை? என்று பங்கமாக கலாயத் துள்ளார்.

-விளம்பரம்-

Advertisement