கவினை போல இந்த சீசனிலும் ஒரு முக்கோன காதலா ? குயின்சி செயலால் வெறுப்பாகும் ஷிவின். என்ன நடக்குது பிக் பாஸ் வீட்டில் ?

0
464
Shivin
- Advertisement -

பிக் பாஸ் வீட்டில் சிவின் காதலிக்கும் நபர் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி தற்போது ஆறாவது வாரம் சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஜிபி முத்து, அசீம், அசல், ராபர்ட், ராமசாமி, ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி சாந்தி, விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவாஷினி, சிவின் கணேசன் என 20 பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

பின் முதல் வாரத்திலேயே வைல்ட் கார்ட் எண்ட்ரியாக மைனா நந்தினி வந்து இருக்கிறார். இந்த முறை நிகழ்ச்சியை விறுவிறுப்பாக கொண்டு செல்ல பல மாற்றங்களை பிக் பாஸ் கொண்டு வந்து இருக்கிறது. இதனால் போட்டியாளர்கள் ஓவ்வொருவரும் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். மேலும், இந்த நிகழ்ச்சியில் இருந்து இதுவரை ஜிபி முத்து, மெட்டிஒலி சாந்தி, அசல், ஷெரினா,மகேஷ்வரி, நிவாஷினி ஆகியோர் வெளியேறி இருக்கிறார்கள்.

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில் கண்டிப்பாக காதல் கதை இருக்கும். அந்த வகையில் இந்த சீசனில் ஆரம்பத்தில் இருந்து ரச்சிதாவிடம் ராபர்ட் மாஸ்டர் வழிந்து வருகிறார். ஆனால், இவர்கள் இருவருக்கும் உள்ள கெமிஸ்ட்ரி Cuteஆக இல்லாமல் பார்ப்பவர்களுக்கு எரிச்சலை தான் ஏற்படுத்தி வருகிறது. இதனால் பிக் பாஸ் வீட்டில் ரொமான்ஸ் சுத்தமாக இல்லை என்று ரசிகர்கள் புலம்பி கொண்டு இருக்க தற்போது இந்த வீட்டில் காதல் கண்டன்ட்டாக மாறி இருப்பவர் கதிர்.

விஜே கதிரவன் மீது தான் சிவனுக்கு கிரஸ் ஏற்பட்டு இருக்கிறது. இதை கடந்த சில நாட்களுக்கு முன் சூசகமாகவே சிவின் கதிரவனிடம் சொல்லி இருக்கிறார். ஆனால், அது கதிரவனுக்கு புரியவில்லை. அது மட்டும் இல்லாமல் கதிரவனை ஏற்கனவே செரினா காதலித்ததாக கூறப்பட்டது. அவரை அடுத்து மகேஸ்வரியும் தன்னுடைய கிரஷ் கதிரவன் தான் என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில் தற்போது சிவின் கிரஸ்சாக கதிரவன் இணைந்து இருக்கிறார்.

-விளம்பரம்-

ஆனால், ஷிவினின் காதலை கதிரவன் ஏற்றுக்கொள்வது போல இல்லை. இப்படி ஒரு நிலையில் இது முக்கோன காதல் போல தற்போது மாறி இருக்கிறது. கடந்த சில நாட்களாக கதிர் மற்றும் குயின்சி ஆகி இருவர் இடையில் ரொமான்ஸ் செல்வது போல சென்று கொண்டு இருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட இவர்கள் இருவரும் ஒரே மாதிரியான ட்ரெஸ்சை போட்டு இருந்ததை சுட்டிகாட்டி மைனா, மணி ஆகியோர் கலாய்த்து இருந்தனர்.

அதே சமயம் கதிருக்கு குயின்ஸி மீது ஒரு Crush இருப்பதை உணர்ந்த ஷிவின், கதிர் உனக்கு அண்ணன் என்று கூறி இருந்தார். அதனை குயின்ஸி பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. மேலும், கதிர், ஷிவினின் காதலை ஏற்றுக்கொள்ளாமல் தற்போது குயின்ஸி மீது காதலில் விழுந்துவிட்டதாக நெட்டிசன்கள் பலரும் கமன்ட் செய்து வருகின்றனர். இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது சீசன் 3யில் கவின் – லாஸ்லியா- சாக்ஷி போன்று இந்த சீசனிலும் ஒரு முக்கோன காதல் துவங்கி இருப்பதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

Advertisement