ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு லேட்டாக செல்வதாக சமூக வலைத்தளத்தில் தன்னை பற்றி வந்த வதந்திக்கு மேடையில் பதிலடி கொடுத்துள்ளார் கவின். மிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக கவின் திகழ்ந்து இருக்கிறார். இவர் சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தான் தன்னுடைய பயணத்தைத் தொடங்கினார். அதற்கு பின் தன்னுடைய நண்பர்களின் குறும் படங்களில் நடிக்க தொடங்கினார். அதன் மூலம் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் என்ற தொடரில் நடிகராக அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து இவர் சரவணன் மீனாட்சி என்ற தொடரில் வேட்டையன் என்ற கதாபாத்திரத்தின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை சேர்த்தார். பின்பு 2017 ஆம் ஆண்டு வெளிவந்த சத்ரியன் என்ற திரைப்படத்தில் துணைக் கதாபாத்திரத்தில் நடித்து வெள்ளித்திரையில் கவின் நுழைந்தார். பிறகு இவர் 2019 ஆம் ஆண்டு நட்புன்னா என்னன்னு தெரியுமா, லிப்ட் போன்ற படத்தில் நடித்து இருந்தார்.

Advertisement

கவின் நடித்த படங்கள் :

இதனை தொடர்ந்து டாடா படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக சிந்து என்ற கதாபாத்திரத்தில் அபர்ணாதாஸ் நடித்து இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று மட்டும் இல்லாமல் வசூல் சாதனையும் செய்து இருந்தது. இந்த படத்தை பார்த்து பிரபலங்கள் பலரும் பாராட்டி இருந்தார்கள். இதனை அடுத்து கவின் அவர்கள் இரண்டு படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

அதில் ஒன்று, நடன இயக்குனர் சதீஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ரொமான்ஸ் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.இப்படி இருக்கும் நிலையில் கவின் படப்பிடிப்பிற்கு சரியான நேரத்திற்கு வருவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. மேலும், இது தொடர்பாக பிரபல பட தயாரிப்பாளர் பேட்டியில் கூறியிருப்பது, சமீப காலமாகவே இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களுடன் கவின் ஒழுங்காக வேலை செய்வதில்லை.

Advertisement

கவின் மீது எழுந்த குற்றச்சாட்டு :

அவர் படப்பிடிப்பிற்கும் சரியான நேரத்திற்கு வருவதில்லை. அப்படியே லேட்டாக வந்தாலும் ரொம்ப நேரமாக அவர் கேரவனிலேயே உட்கார்ந்து கொண்டிருக்கிறார்.இதனால் மற்ற நடிகர்களுடைய காட்சிகளும் எடுப்பதற்கு சிரமம் ஆகிறது. முதலில் படங்களில் நடிக்க நடிகர்களிடம் கால்ஷீட் கேட்டு அவர்களுக்கான நேரம் எல்லாம் ஒதுக்கி அந்த நாட்களில் தேவையான வேலைகள் எல்லாம் செய்யும் போது ப்ரொடக்ஷன் செலவுஅதிகமாக இருக்கும். இப்படி இருக்கும்போது படப்பிடிப்பிற்கு நடிகர்கள் தாமதமாக வந்தால் அதற்கான செலவுகள் அனைத்துமே தயாரிப்பாளர்கள் தலையில் தான் விழும்.

Advertisement

கவின் பதிலடி :

இதனால் தான் ரஜினிகாந்த், கமலஹாசன் போன்ற நடிகர்கள் சரியான நேரத்திற்கு வந்து விடுவார்கள். ஆனால், தற்போது வரும் நடிகர்கள் இப்படி எல்லாம் யோசிப்பதில்லை என்று ககூறி இருந்தார். இந்த நிலையில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கவின் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசி இருக்கிறார். அதில் ‘நான் லேட்டாக வந்துட்டேனா? எத்தனை மணிக்கு வருவேன்னு எதாவது சொன்னார்களா? 7 மணியா? என்னிடமம் 7 மணி என்று தன் கூறினார்கள், நான் ஆறு மணியில் இருந்து நானும் ரெடியா தான் இருந்தேன். ஆனால் 6.45 க்கு தான் என்னை அழைக்க வந்தார்கள். அதனால் அவர்களுக்கும் சேர்த்து நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்’ என்று பேசி இருக்கிறார்.

Advertisement