பீஸ்ட் படம் வெளியாவதற்கு முன்பாகவே தமிழில் ஹீரோயினாக கமிட்டான அபர்ணா – முதல் படமே பிக் பாஸ் ஹீரோவுடன் தான்.

0
195
aparna
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக தளபதி விஜய் ஜொலித்து கொண்டிருக்கிறார். இவருடைய படத்தை பார்ப்பதற்கு என்றே திரையரங்குகளில் திருவிழா போன்று கூட்டம் அலைமோதும். ஏன்னா, அந்த அளவிற்கு அவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. தளபதி விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த மாஸ்டர் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது தளபதி விஜய் அவர்கள் ‘பீஸ்ட்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை நெல்சன் திலிப்குமார் இயக்கி வருகிறார்.

-விளம்பரம்-

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இது தளபதி விஜய்யின் 65வது படம். சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக இந்த படத்தை தயாரித்து வருகிறது. இந்த படத்தில் இயக்குனர் செல்வராகவன் வில்லனாக நடித்து வருகிறார். படத்தில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் யோகி பாபு, கிங்ஸ்லீ மற்றும் விடிவி கணேஷ் போன்ற பலர் நடிக்கின்றனர். இதனால் இந்த படத்தில் நகைச்சுவைக்கு பஞ்சம் இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

பீஸ்ட் மூலம் தமிழில் அறிமுகம் :

அதோடு விஜய்யின் அம்மாவாக பிரபல செய்தி வாசிப்பாளரான சுஜாதா பாபு இப்படத்தில் நடித்துள்ளார். மேலும், விஜய்யின் பீஸ்ட் படத்தின் போஸ்டர்கள் எல்லாம் சமீபத்தில் சோசியல் மீடியாவில் வெளியாகி இருந்தது. இந்நிலையில் இந்த படத்தில் முக்கியமான வேடத்தில் நடிகை அபர்ணா தாஸ் நடிக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்தது. மேலும், இந்த படத்திற்கு பூஜை போட்ட அன்றே பூஜையிலும் அபர்ணா தாஸ் கலந்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்க்கு தங்கையாக அபர்ணா :

பீஸ்ட் படத்தில் அபர்ணா அவர்கள் தளபதி விஜயின் தங்கையாக நடிக்கிறாராம். மேலும், கடந்த மே மாதமே இவருடைய காட்சிகள் படமாக்க பட வேண்டியதாக இருந்தது. ஆனால், கொரோனா இரண்டாவது அலை காரணமாக இவருடைய காட்சிகள் தள்ளி வைக்கப்பட்டது. சமீபத்தில் தான் இவருடைய காட்சிகளெல்லாம் சென்னையில் படமாக்கப்பட்டது. இந்த படத்தின் மூலம் தான் அபர்ணா தாஸ் தமிழில் அறிமுகமாக இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

-விளம்பரம்-

தமிழில் நாயகியான அபர்ணா :

நடிகை அபர்ணா தாஸ் அவர்கள் ஏற்கனவே மலையாளத்தில் பகத் பாசிலுடன் ஞானப்பிரகாசன் மற்றும் வினித் சீனிவாசனுடன் மனோகரம் என்ற இரண்டு படங்களில் நடித்துள்ளார். ஆனால், பீஸ்ட் தான் இவருக்கு முதல் தமிழ் படம். இப்படி ஒரு நிலையில் இவர் தமிழில் நாயகியாக கமிட் ஆகி இருக்கிறார். அதுவும் தன் முதல் தமிழ் படத்திலேயே கவினுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறாராம் அபர்ணா.

கவினுக்கு ஜோடி ;

ஊர் குருவி படத்தை தொடர்ந்து நடிகர் கவின், தற்போது இயக்குநர்  கணேஷ்  பாபு இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் தான் அபர்ணா நாயகியாக நடிக்க இருக்கிறார். படத்தை அம்பேத்குமார் தயாரிக்கிறார். 2K கிட்ஸின்  ரசனைக்கு ஏற்ற காதல் கதையாக மேலும்  முக்கிய அம்சமாக இது  கேளிக்கையுடன் கூடிய திரைப்படமாக இருக்கும் என்று படத்தின் தயாரிப்பாளர் கூறி இருக்கிறார். இந்த படத்தை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது.


Advertisement