முதல் ஆளாக சரவணனை சந்தித்த சாண்டி மற்றும் கவின்.. வைரலாகும் புகைப்படங்கள்..

0
16458
saravanan sandy kavin
- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் பல்வேறு சர்ச்சையான விஷயங்கள் நடந்தேறியது. அதில் முதல் சர்ச்சையாக வெடித்தது சரவணனின் திடீர் வெளியேற்றம் தான். சரவணன் பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது ஒரு எபிசோடில் கமலிடம் சிறுவயதில் பேருந்தில் பெண்களை தான் உரசி உள்ளதாக மிகவும் ஜாலியாக ஒப்புக்கொண்டார். ஆனால் ,அந்த விஷயம் பெரும் சர்ச்சையாக வெடிக்க சரவணனை பிக்பாஸ் மன்னிப்பு கேட்க வைத்தார். மேலும், தான் ஏன் அப்படி சொன்னேன் என்பதற்கான விளக்கத்தையும் கொடுத்திருந்தார் சரவணன். இருப்பினும் அவர் மன்னிப்பு கேட்ட சில நாட்களில் அவரை பிக் பாஸ் வீட்டில் இருந்து கண்ணை கட்டி வெளியே அனுப்பி இருந்தனர். இந்த விஷயம் போட்டியாளர்கள் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

-விளம்பரம்-
Image

சரவணன் வெளியேறியதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வருகிறது. சரவணன், சேரனை மரியாதை குறைவாக பேசி இருந்ததால் அவரை வெளியேற்ற சேரனின் ஆதரவாளர்கள் பிக் பாஸ் வீட்டை முற்றுகையிட்டனர் என்றும், கமலை சரவணன், கோர்த்து விடுறேன் என்று கூறியதால் தான் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது. சரவணன் பிக் பாஸ் வீட்டில் இருந்த வரை சாண்டி மற்றும் கவின் தான் எப்போதும் சரவணனுடனே இருந்தனர். கவினை விட சாண்டி தான் சரவணன் மீது அதிக பாசத்தை வைத்திருந்தார். சரவணன் பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய பின்னர் சரவணனை தான் மிஸ் செய்கிறேன் என்று கண்கலங்கி அழுதார் சாண்டி.

- Advertisement -

பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறும் போட்டியாளர்கள் பேட்டி கொடுப்பது வழக்கம். ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் எந்த ஒரு பேட்டியிலும் சரவணன் பங்கேற்கவில்லை.ஆனால், சரவணன் சாண்டியின் குடும்பத்தினரை நேரில் சென்று சந்தித்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் கூட கடந்த சில வாரத்திற்கு முன்னர் வெளியானது. அதில் சாண்டியின் மகளை கையில் ஏந்தியபடி இருக்கிறார் சரவணன். அந்த புகைப்படம் சமூக வளைத்தளத்தில் வைரலாக பரவி வந்தது. ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைவடைந்து பல நாட்கள் ஆன நிலையில் சரவணனை எந்த போட்டியாளரும் நேரில் சென்று சந்திக்கவில்லை.

Image
Image

சரவணனை மட்டுமல்ல பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சர்ச்சையான முறையில் வெளியேறிய மதுமிதாவை கூட யாரும் நேரில் சென்று சந்திக்க வில்லை. ஆனால், சேரன் மட்டும் மதுமிதாவை நலன் விசாரித்ததற்காக மதுமிதாவின் கணவர் நன்றி தெரிவித்திருந்தார். சரி, மதுமிதா தான் மற்ற போட்டியாளர்களிடம் சண்டை போட்டு பேசாமல் இருந்து வந்தார். அதனால் அவரை யாரும் சந்திக்கவிலை என்றால் சரவணனை ஏன் இன்னும் யாரும் சந்திக்கவில்லை என்று ரசிகர்கள் கேள்விகளை கேட்டு வந்தார்கள். மற்ற போட்டியாளர்கள் கூட பரவாயில்லை பிக் பாஸ் வீட்டில் சரவணனிடம் மிகவும் நெருக்கமாக இருந்த சாண்டி மற்றும் கவின் கூட என்னும் சரவணனை ஏன் சந்திக்கவில்லை என்று பலரும் விமர்சித்தனர்.

-விளம்பரம்-
Image

இந்த நிலையில் இந்த சர்ச்சை கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சரவணனை கவின் மற்றும் தாண்டி நேரில் சென்று சந்தித்து தொல்லை புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது. இந்தப் புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், இந்த புகைப்படத்தில் சரவணன் மிகுந்த மகிழ்ச்சியுடன் சாண்டி மற்றும் கவினுடன் மிகவும் மகிழ்ச்சியாக போஸ்களை கொடுத்துள்ளார். மேலும், இன்னும் சில நாட்களில் பிக்பாஸ் கொண்டாட்டம் நடைபெற உள்ள நிலையில் சரவணன் பிக்பாஸ் கொண்டாட்டத்திற்காக வது வருவாரா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். ஆனால், அவருக்கு விஜய் டிவி மற்றும் பிக் பாஸ் குழு அழைப்பை விடுமா என்பது தான் தெரியவில்லை.

Advertisement