தோனி ஸ்டைலில் ஒய்வை அறிவித்த கவின் – ஒரே வீடியோவில் பல இளசுகளையும் சோகத்தில் ஆழ்த்திட்டார்.

0
88425
kavin
- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் நடிகர் கவின். இவர் ஆர்.ஜேவாக தன்னுடைய பயணத்தைத் தொடங்கினார். பின்னர் சிறு சிறு ஷார்ட் பிலிம்களில் நடித்தார். பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனா காணும் சீரியலில் நடிக்கத் தொடங்கினார். அதற்கு பிறகு பிரபலமான சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்தார். இந்த சீரியலின் மூலம் தான் இவருக்கு சினிமாவில் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. மேலும், இவர் நட்புன்னா என்னன்னு தெரியுமா என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார்.

-விளம்பரம்-

ஆனால், சரவணன் மீனாட்சி தொடருக்கு பின்னர் கவினுக்கு எக்கச்சக்க பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது பிக் பாஸ் நிகழ்ச்சி தான். கவின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போது இவருக்கு சமூக வலைத்தளத்தில் ஏகப்பட்ட ஆர்மிக்கல் கூட உருவானது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் தான் இவருக்கு இருக்கும் ரசிகர்களின் பட்டாளம் பற்றியே பலருக்கும் தெரிந்தது. இந்த நிலையில் தான் ரிட்டேர் ஆகப் போவதாக கவின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரித்துள்ளார்.

- Advertisement -

வேற ஒன்றும் இல்லை சமீபத்தில் இந்தியாவில் தடை செய்யப்பட்ட Pubg விளையாட்டில் இருந்து தான் கவின் வெளியேறி உள்ளதை இப்படி அறிவித்து உள்ளார். கிழக்கு லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஜூன் மாதம் இந்திய-சீன எல்லை பகுதியான லடாக்கில் இரு நாட்டு வீரர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுதும் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. சீன பொருட்கள் மற்றும் செயலிகளை புறக்கணிப்போம் என்றும் சமூகவலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டுவந்தனர். இதை தொடர்ந்து டிக் டாக் உட்பட 59 சீன செயலியை இந்திய செய்தது.

இதை தொடர்ந்து கடந்த செப்டம்பர் 2 புதன் கிழமை  பப்ஜி, பப்ஜி மொபைல் லைட், வீசாட், பைடு, ரைஸ் ஆப் கிங்டம் உள்ளிட்ட 118 செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடைவிதித்து இருந்தது. இந்த 118 தடை செய்யப்பட்ட செயலியில் பப்ஜி விளையாட்டை தடை செய்தது தான் இளசுகளை கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் pubg விளையாட்டில் இருந்து ஒய்வு பெறுவதாக வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ள கவின் தோணி தனது ஓய்வை அறிவித்தது போல Pubgயில் இருந்து தான் ஒய்வு பெறுவதாக அறிவித்து உள்ளார். கவினை போல pubg தடையால் சோகத்தில் இருக்கும் பல இளசுகள் கவினின் இந்த வீடியோவால் மேலும் சோகத்தில் ஆழ்ந்துவிட்டனர்.

-விளம்பரம்-
Advertisement