நேற்று சொல்லியடி டாஸ்கில் கேட்ட அந்த ‘திண்டுக்கல் தண்டபாணி’ குரல், இந்த பிக் பாஸ் 3 பிரபலத்தோடதா ?

0
11224
BB
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியின் நேற்றய நிகழ்ச்சியில் ‘சொல்லி அடிப்பேனடி’ என்ற டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டு இருந்தது. இந்த டாஸ்கில் நடுவராக ஜித்தன் ரமேஷ் அறிவிக்கப்பட்டு இருந்தார். இந்த டாஸ்கில் போட்டியாளர்கள் இரண்டு குழுக்களாக பிரிந்து விளையாடினார்கள். மேலும், இந்த டாஸ்கில் ஒரு வட்டத்திற்குள் முட்டை வைக்கப்பட்டு இருக்கும். அதில் இரண்டு குழுவை சேர்ந்த ஒவ்வொரு போட்டியாளர்களும் நேருக்கு நேர் நிற்க வேண்டும். அப்போது ஒரு குரல் தலை, கால், முட்டி என்று சொல்லல சொல்ல அதனை பின்பற்றி விளையாட வேண்டும். அந்த குரல் எப்போது முட்டை என்று சொல்கிறதோ அப்போது யார் முட்டையை எடுக்கின்றனரோ அவர்கள் தான் வின்னர்.

-விளம்பரம்-

அந்த நபர், தோல்வியடைந்த நபர் தலையில் முட்டையை உடைக்கலாம். இவ்வாறாக அந்த டாஸ்க் ஜாலியாக சென்றது. இந்த டாஸ்கின் போது கேட்ட அந்த நபரின் குரல் தன்னுடைய பெயர் ‘திண்டுக்கல் தண்டபாணி’ என்று அறிமுகம் செய்து வைத்துக்கொண்டது. இந்த குரலை கேட்ட பலரும் இது எதோ மிகவும் பரிட்சயமான குரல் போல இருக்கிறதே என்று தான் எண்ணி இருப்பார்கள்.

- Advertisement -

அதுவும் பலரும் இது முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரான கவினின் குரலாக தான் இருக்கும் என்று கூறினர். அதே போல நேற்று கேட்ட அந்த ‘திண்டுக்கல் தண்டபாணி’யின் குரல் கவினுடையது தான் என்று பல மீம்கள் கூட வைரலாக பரவியது. இப்படி ஒரு நிலையில் நடிகர் கவின் இதுகுறித்து மீம் ஒன்றை பதிவிட்டு அதற்கான விளக்கத்தையும் கொடுத்துள்ளார். அந்த மீமில் ‘நீங்க தானா அந்த திண்டுக்கல் தண்டபாணி நீங்கதனா’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கு கீழே தனது விளக்கத்தை கொடுத்துள்ள கவின். ‘அது நான் இல்லப்பா, இதற்கான பாராட்டுக்கள் அதற்கு உரியவரிடம் செல்ல வேண்டும். உண்மையான ‘திண்டுக்கல் தண்டபாணிக்கு’ சக்தி செல்லட்டும் ‘ என்று கூறியுள்ளார். பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சிகளில் முன்னாள் போட்டியாளர்கள் விருந்தாளியாக செல்வது வழக்கமான ஒன்று தான் அந்த வகையில் இந்த சீஸனின் எப்போது பிக் பாஸ் 3 போட்டியாளர்கள் வருவார்கள் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement