அவங்க வீட்ல பாத்துட்டு இருப்பாங்க அதான் அப்படி.!லாஸ்லியா குடும்பத்தை பற்றி பேசிய கவின்.!

0
5611
Kavin
- Advertisement -

பிக்பாஸ் வீட்டில் இருந்து கவின் வெளியேறிய செய்திதான் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைய இன்னும் சில நாட்களே இருந்த நிலையில் பிக்பாஸ் அறிவித்திருந்த 5 லட்ச ரூபாய் பரிசுத்தொகையை எடுத்துக்கொண்டு கவின், பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.கவின் வெறியேறியது சக போட்டியாளர்களும் அவரது ரசிகர்களும் ஏற்றுக் கொள்ள முடியாமல் இருந்து வருகின்றனர்.

-விளம்பரம்-

சக போட்டியாளர்கள் எவ்வளவு கூறியும் அவர்களின் பேச்சைக் கேட்காத கவின், நான் இந்த முடிவை தெளிவாகத்தான் எடுத்திருக்கிறேன் என்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்தார். கவின் வெளியேறியதால் இந்த வாரம் யார் வெளியேற போகிறார்கள் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

- Advertisement -

இதுவரை மஹத், யாஷிகா ,ஜனனி, ரித்விகா, ஹரிஷ் கல்யாண் , ஐஸ்வர்யா தத்தா என்று பலரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ள நிலையில் இன்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் கவின் வர உள்ளதாக ஏற்கவே தகவல்கள் வெளியான நிலையில் இன்று வெளியான முதல் ப்ரோமோவில் கவின் குறித்து பேசியுள்ளார் கமல்.

தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமவில் கவின் பிக் பாஸ் மேடையில் வந்துள்ளார் என்பது உறுதியாகியுள்ளது. அப்போது லாஸ்லியா குறித்தும் அவரது குடும்பம் குறித்தும் பேசியுள்ளார் கவின்.

-விளம்பரம்-
Advertisement