ஒரே நாளில் கவினுக்கு எதிராக நடக்கும் இத்தனை சதி. குழப்பத்தில் கவின் ஆர்மி.

0
6719
kavin
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் மூன்றாவது சீசன் கடந்த செப்டம்பர் மாதம் நிறைவடைந்தது. இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான போட்டியாளர்கள் கலந்துகொண்டார்கள். அந்த வகையில் இந்த சீசனில் கலந்து கொண்ட ஆண் போட்டியாளர்கள் மிகவும் அதிகமான ரசிகர்களை கொண்டவராக இருந்து வந்தார் நடிகர் கவின். பிக் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பாக விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் வேட்டையன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்திருந்தார் நடிகர் கவின். அந்த சீரியலில் கிடைத்த பிரபலம் மூலம் இவர் சினிமாவில் ஹீரோவாகவும் நடித்து இருந்தார்.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியை பொறுத்த வரை கடந்த இரண்டு சீசன்களை விட மூன்றாவது சீசனில் தான் நெட்டிசன்கள் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார்கள் என்றால் அது மிகையில்லை,இதனை உணர்ந்த இந்த பிக் பாஸ் சீசன் 3  போட்டியாளர்கள் வரும் போதே தங்களுக்கென ஆர்மி என்று சொல்லக்கூடிய ரசிகர்கள் குழுவை சமூக வலைத்தளங்களில் உருவாக்கிவிட்டு தான் வருகிறார்கள். அதிலும் கவினுக்கு சமூக வலைதளத்தில் இருந்த ஆதரவை பற்றி நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. அந்த அளவிற்கு கவினுக்கு சமூக வலைதளத்தில் பல ஆர்மிக்கள் இருந்து வருகிறது.

இதையும் பாருங்க : அனுஷ்காவின் அருகில் தம்மாதுண்டு போல இருக்கும் அஞ்சலி. அனுஷ்காவோட உயரம் இப்போதா தெரியுது.

- Advertisement -

கவின் பிக் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த வரை #Weadmirekavin #Kavinnotaeasytarget #kavintimetoshine போன்ற பல்வேறு ஹேஷ் டேக்குகளை அடிக்கடி கவின் ரசிகர்கள் உருவாக்கி வந்தார்கள். அதிலும் இதில் ஒரு சில ஹேஷ் டேக்குகள் இந்திய அளவில் ட்ரெண்டிங்கிலும் வந்தது. இந்த நிலையில் நேற்று (நவம்பர் 6) மட்டும் கவினுக்கு எதிராக பல்வேறு எதிர்மறையான செயல்கள் நடைபெற்றுள்ளதாக கவின் ஆர்மி புலம்பி வருகிறது.

-விளம்பரம்-

அது என்னவெனில் பிரபல இணையதள ஊடகம் ஒன்று கவினின் பழைய வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளது, கவினை தொடர்ந்து டார்கெட் செய்து வரும் வீடியோ மீம்ஸ் என்ற வலைத்தளம் இன்று கவினை கலாய்த்து வீடியோ ஓன்றை வெளியிட்டுள்ளது. ஷெரின் தனது சமூக வலைதள பக்கத்தில் முகெனை ஆதரிக்கும் வகையில், அவருடைய ட்ரேட் மார்க் வசனமான அன்பு ஒன்று தான் அனாதை என்று பதிவிட்டுள்ளார். சாக்க்ஷி, தனது புகைப்படங்களை கிண்டல் செய்த நபர்களை கவின் பேய்ட் ஆர்மி என்று மறைமுகமாக கூறி கமன்ட் செய்துள்ளார். இப்படி இன்று ஒரு நாள் மட்டும் கவினுக்கு எதிராக இத்தனை விஷயங்கள் நடந்துள்ளதாக கவின் ஆர்மி கவலையில் இருந்து வருகிறது. மேலும், கவின் பெயரை கெடுக்கவே இப்படி நடந்துள்ளதாக கவின் ஆர்மி தெரிவித்து வருகின்றனர்.

Advertisement