பிக்பாஸ் கவின் குடும்பத்தை சார்ந்தவர்கள் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஒரு பிரச்சனையின் போது பேசுகையில் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாகத்தான் திருச்சியிலிருந்து சென்னைக்கு இடம் பெயர்ந்தோம் அப்போது எங்களுக்கு நண்பர்கள் தான் உதவி செய்தார்கள்.
உறவினர்கள் யாரும் எங்களை கண்டு கொள்ளவில்லை எனக்கென்று சில கடன்கள் உள்ளது. அதை அடக்கத்தான் நான் பிக்பாஸ் சிகிச்சைக்கு வந்தேன் இன்னும் ஒரு சில வாரங்கள் பிக் பாஸ் வீட்டில் தங்கி விட்டால் அந்த கடனை அடைப்பதற்கான பணத்தை சம்பாதித்து விடுவேன் என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில்தான் கவின் இன் தாயார் மற்றும் அவரது உறவினர்கள் சீட்டு கம்பெனி நடத்தி பல லட்சம் மோசடி செய்ததாக நிரூபிக்கப்பட்டு அவருக்கு சிறை தண்டனையும் வழங்கப்படுகிறது.
சீட்டு கம்பெனி நடத்தி பணத்தை திருப்பி தரவில்லை என்று கவின் தாயார் உட்பட 5 பேர் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது.12 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வந்த இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சொர்ண ராஜன் மற்றும் அருணகிரி ஆகியோர் இறந்த நிலையில் தற்போது கவியின் தாயார் ராஜலட்சுமி அவரது மருமகள் ராணி ஆகியோர் பண மோசடியில் ஈடுபட்டு உள்ளது தற்போது உறுதியாகியுள்ளது. எனவே, இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட இந்த நால்வருக்கும் 7 ஆண்டு சிறை தண்டனையும் இந்த வழக்கில் சாட்சி அளித்த 29 பேருக்கு தலா ஒரு லட்சம் என்று 29 லட்சம் வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த நிலையில் தனது தாயார் கைது செய்யப்பட்டதை அறிந்த கவின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதாக சில தகவல்கள் வெளியாகி உள்ளது ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை ஏற்கனவே பிக் பாஸ் வீட்டில் இருந்து சரவணன் மதுமிதா போன்றவர்கள் அதிரடியாக வெளியேறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது