வீட்டைவிட்டு வெளியேறினாரா கவின் ? இணையத்தில் பரவும் செய்தி! உண்மை என்ன ?

0
16132
Kavin

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பிக்பாஸ் கவின் குடும்பத்தை சார்ந்தவர்கள் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஒரு பிரச்சனையின் போது பேசுகையில் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாகத்தான் திருச்சியிலிருந்து சென்னைக்கு இடம் பெயர்ந்தோம் அப்போது எங்களுக்கு நண்பர்கள் தான் உதவி செய்தார்கள் என்று கூறியிருந்தார் கவின்.

சீட்டு கம்பெனி நடத்தி பணத்தை திருப்பி தரவில்லை என்று கவின் தாயார் உட்பட 5 பேர் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது.12 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வந்த இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சொர்ண ராஜன் மற்றும் அருணகிரி ஆகியோர் இறந்த நிலையில் தற்போது கவியின் தாயார் ராஜலட்சுமி அவரது மருமகள் ராணி ஆகியோர் பண மோசடியில் ஈடுபட்டு உள்ளது தற்போது உறுதியாகியுள்ளது. எனவே, இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட இந்த நால்வருக்கும் 7 ஆண்டு சிறை தண்டனையும் இந்த வழக்கில் சாட்சி அளித்த 29 பேருக்கு தலா ஒரு லட்சம் என்று 29 லட்சம் வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஆனால், இதுவரை தனது தாயார் கைது செய்யபட்ட விஷயம் கவினுக்கு தெரியபடுத்தவில்லை என்று செய்திகள் பரவி வந்தது. அதே போல கவனின் நண்பர் அருவி பிரதீப் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூட விஜய் டிவி கவின் அம்மாவிடம் இது குறித்து கவினிடம் பேச வேண்டுமா என்று கேட்ட போதும் கவினின் அம்மா தான் வேண்டாம் என்று சொன்னதாக பிரதீப் கூறியிருந்தார்.

இந்த நிலையில் இந்த வாரம் நடைபெற்று வரும் freeze டாஸ்க்கில் சாண்டியின் மனைவி உள்ளே சென்ற போது கவினின் அம்மா விஷயத்தை கவினிடம் சொன்னதாகவும் இதனால் கவின் பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியேறியதாகவும் ஒரு செய்தி வைரலாக பரவி வருகிறது. ஆனால், இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.

This image has an empty alt attribute; its file name is kavin-12.jpg

ஏற்கனவே இதே போன்று தனது தாயார் கைது செய்யப்பட்டதை அறிந்த கவின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதாக சில நாட்களுக்கு முன்னர் ஒரு தகவல்கள் வெளியாகிஇருந்தது. மேலும், சரவணன் வெளியேறியது போல கவினும் கண்ணை கட்டி அழைத்து செல்வது போல ஒரு புகைப்படமும் அந்த சமயத்தில் வைரலானது என்பதும் குறிப்பிடத்தக்து.

ஆனால், இந்த விஷயம் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கமன்ட் செய்துள்ள சாண்டியின் மனைவி பொய் என்றாலும் ஒரு நியாயம் வேண்டாமா, நான் இன்னும் உள்ளவெ போகல என்று கமன்ட் செய்துள்ளார். எனவே, இது பொய்யான தகவல் என்று தெளிவாகியுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.