டாக்டர் படத்தில் கவின் இருக்காரு ஆனா இல்ல. குழப்பிவிட்ட இயக்குனர் நெல்சன்.

0
931
kavinsivakarthikeyan
- Advertisement -

சின்னத்திரையில் அதாவது விஜய் டிவியில் 2012 ஆம் ஆண்டு ஒளிபரப்பான ‘கனா காணும் காலங்கள்’ என்ற தொடரின் மூலம் நடிகராக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான தொடர்களில் ஒன்றான ‘சரவணன் மீனாட்சி’ தொடரில் வேட்டையன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து தூள் கிளப்பினார். இதற்கு பிறகு அவர் சில படங்களில் நடித்தும் வந்தார். இதனை தொடர்ந்து இந்த வருடம் உலக நாயகன் கமலஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் தமிழ் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கவின் அவர்கள் போட்டியாளராக கலந்து கொண்டார்.

-விளம்பரம்-
Doctor Sivakarthikeyan Movie | Doctor Sivakarthikeyan Update ...

மேலும்,இந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கவினை பற்றிப் பேசாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள்.இதனைத் தொடர்ந்து கவின்–லாஸ்லியா காதலும் கொடி கட்டி பறந்தது என்றும் சொல்லலாம். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தும் இவர்கள் காதல் குறித்து தற்போது வரை கூட ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகின்றன.இதனை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்னே கவின் ‘நட்புன்னா என்னனு தெரியுமா’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தார்.

- Advertisement -

மேலும், சில பிரச்சனைகளால் இந்த படம் வெளியிடுவதற்கு தாமதமானது. மேலும்,இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்திருந்தார்.இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றது. இதனை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு நடிகர் கவினுக்கு சினிமாவில் அடுத்தடுத்து படங்கள் வரிசையாக இருக்கின்றன என்ற தகவலும் வெளிவந்து உள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளார்கள் என்றும் தெரிய வந்துள்ளது.

Image

தற்போது நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் படம் டாக்டர்.இந்த படத்தில் கவின் நடிப்பார் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பக்கப்பட்டது. இதற்கு காரணம் சிவகார்த்திகேயனுடன் கவின் டாக்டர் படப்பிடிப்பில் இருந்த புகைப்படங்கள்.ஆனால், இப்படத்தின் இயக்குனர் நெல்சன் சமீபத்தில் அளித்த பேட்டியில் ‘கவின் இப்படத்தில் நடிகவில்லை ஆனால் இந்த படத்தில் வேலை செய்கிறார்’ என்று குழப்பியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement