தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக விளங்கி வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிகர் மட்டுமல்லாமல் சிங்கர், கம்மிடியன், மிமிக்கிரி, தொகுப்பாளர் என பல திறமைகளைக் கொண்டவர். கடந்த ஆண்டு பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த ‘நம்ம வீட்டு பிள்ளை’ படம் மக்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது. இந்த படம் குடும்ப கதை குறிப்பாக அண்ணன், தங்கை பாசத்தை மையப்படுத்திய படமாக இருந்தது. இதனை தொடர்ந்து இயக்குனர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வந்த படம் “ஹீரோ”. இந்த படம் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. தற்போது நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் படம் டாக்டர்.
தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரில் சிவகார்த்திகேயன் அவர்கள் கபாலி ரஜினி போல நாற்காலியில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து உள்ளார். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்து வருகிறார். இந்த படத்தை கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் தயாரிக்கிறார். நடிகர் சிவகார்த்திகேயனின் 35வது பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்தநாளுக்கு நடிகர் கவின் சென்று உள்ளார். பின் சிவகார்த்திகேயன் பிறந்தநாளை கவின் கொண்டாடியுள்ளார். தற்போது சிவகார்த்திகேயன் பிறந்தநாளில் கவின் சேர்ந்து உள்ள வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக வருகிறது.
இதையும் பாருங்க : வெறும் இலையை வைத்து மறைத்து போஸ் கொடுத்த தோனி பட நடிகை கியாரா.
விஜய் டிவியில் 2012 ஆம் ஆண்டு ஒளிபரப்பான ‘கனா காணும் காலங்கள்’ என்ற தொடரின் மூலம் நடிகராக அறிமுகமானார் கவின். இதனைத் தொடர்ந்து ‘சரவணன் மீனாட்சி’ தொடரில் வேட்டையன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து தூள் கிளப்பினார். இதற்கு பிறகு அவர் சில படங்களில் நடித்தும் வந்தார். பின் தமிழ் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கவின் அவர்கள் போட்டியாளராக கலந்து கொண்டார். இந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கவினை பற்றிப் பேசாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு மக்களிடையே பிரபலமானார். தற்போது வரை சோசியல் மீடியாவில் கவின்–லாஸ்லியா காதல் கொடி கட்டி பறந்து வருகிறது என்றும் சொல்லலாம்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்னே கவின் ‘நட்புன்னா என்னனு தெரியுமா’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தார். இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றது. இதனை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு நடிகர் கவினுக்கு சினிமாவில் அடுத்தடுத்து படங்கள் வரிசையாக இருக்கின்றன. சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் அவர்கள் நடிக்கும் டாக்டர் படத்தில் கவின் நடிக்க உள்ளதாகவும், சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கவின் ஹீரோவாகவும் நடிக்க உள்ளார் என்ற தகவல் வந்துள்ளது. தற்போது சிவகார்த்திகேயன் பிறந்த நாளில் கவின் இருப்பது மூலம் சிவகார்த்திகேயன் படத்தில் கவின் நடிக்கிறாரா?? என்று பல கேள்விகள் எழுந்து உள்ளது.