காதலர் தினத்தன்று கவின் போட்ட பதவி. அப்போ லாஸ் நிலைமை ? கமெண்ட் செய்யும் ரசிகர்கள்.

0
60885
kavin
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மத்த இரண்டு சீசன்களை விட மாஸ் காட்டியது. அதோடு இந்த பிக் பாஸ் 3ல் நடந்த சர்ச்சைகளுக்கும், காதல்களுக்கும் பஞ்சமே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு நிகழ்ச்சியில் பூகம்பமே கிளம்பியது. அதிலும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி இந்த அளவிற்கு பட்டையைக் கிளப்பியதற்கு காரணம் என்று பார்த்தால் அது ‘கவின், லாஸ்லியா’ காதல் தான். முதலில் இவர்கள் இருவரும் நண்பர்களாகத் தான் இருந்தார்கள். பின்னர் நாட்கள் செல்லச் செல்ல இருவருக்கும் காதல் மலர்ந்தது.

-விளம்பரம்-

மேலும், இதுவரை வந்த பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சிகளிலேயே கவின்,லாஸ்லியா காதல் வேற லெவல். தற்போது கூட இவர்கள் இருவரும் ‘காதல் காவியங்கள்’ என ரசிகர்கள் கூறிவருகின்றனர். அதுமட்டும் இல்லாமல் கவின், லாஸ்லியா காதல் குறித்து சமூக வலைதளங்களில் பல விதமான கருத்துக்கள் எழுந்த வண்ணம் உள்ளன. மேலும்,ரசிகர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சி நடந்து கொண்டு இருக்கும் போதே “கவிலியா” என்ற ஹேஷ்டேக் ஒன்றை உருவாக்கி இவர்கள் சம்பந்தமான புகைப்படங்களையும், கருத்துக்களையும் பதிவிட்டு வந்தார்கள்.

- Advertisement -

இதையும் பாருங்க : நுரை ததும்பும் குளியல் தொட்டியில் ஒயின் பாட்டிலுடன் கிளாமர் போஸ் – விஸ்வாசம் பட நடிகை.

மேலும், இவர்கள் திருமணம் பற்றி கவின், லாஸ்லியா யோசிப்பதை விட இவர்களுடைய ரசிகர்கள் தான் அதிகம் ஆர்வமாக உள்ளனர். ஆனால் இவர்கள் இருவரும் காதலிக்கிறார்களா இல்லையா என்பதை இதுவரை ஓபனாக கூறியது கிடையாது. இந்த நிலையில் நேற்று காதலர் தினத்தை முன்னிட்டு கவின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்துள்ளார். அதில் தனது நம்பரும் நடிகருமான பீட்டருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து,

-விளம்பரம்-

காலம் முழுக்க என் வேளன்டைன்ஸ் டே உன்கூட தான் இருக்கும்னா, அத யாரால மாத்த முடியும் என்று கேப்ஷன் செய்துள்ளார் கவின். இதனை கண்ட கவின் ரசிகர்கள் பலரும் அப்போ லாஸ்லியா ? என்று கமன்ட் செய்து வருகின்றனர். ஏற்கனவே, கவினுக்கு 2019 ஆம் ஆண்டின் Most Desirable Men On Television என்ற பட்டியலில் முதல் இடம் கிடைத்தது. அந்த வலைத்தளத்திற்கு கவின் பேட்டி அளித்துள்ளபேட்டியில் , நீங்கள் சிங்கிளா இல்லை கமிட்டடா என்று கேள்வி கேட்கப் பட்டதற்கு சிங்கிள் என்று ஒரே வார்த்தையில் பதில் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement