அமிரித்தாவிற்கு பதிலாக வேறு ஒருவர் – கவினின் ‘லிப்ட்’ படக்குழு மீது அமிர்தா அதிருப்தி.

0
796
amirtha

கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அட்லீ இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியாகியான ‘பிகில்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தெறி, மெர்சல் படங்களை தொடர்ந்து இந்த படத்தின் மூலம் மூன்றாவது முறையாக இணைந்தனர் விஜய் மற்றும் அட்லீ கூட்டணி. பெண்கள் கால்பந்தாட்ட விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் பெண்கள் கால்பந்தாட்ட அணியில் இந்துஜா ரெபா மோனிகா, வர்ஷா பொல்லம்மா போன்ற ரசிகர்களுக்கு பல பரிட்சயமான நடிகைகள் நடித்திருந்தனர்.

Image

ஆனால், இந்த படத்தின் மூலம் புதிய பிரபலத்தை பெற்றது அம்ரிதா ஐயர் தான்.இந்த படத்தில் தென்றல் என்று கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை அதிகம் ஈர்த்துள்ளார். நடிகை அமிர்தா விஜய் நடிப்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான தெறி படத்தில் நடித்திருக்கிறார். அந்த படத்தில் சமந்தாவின் உறவினர் பெண்ணாக நடித்திருந்தார். மேலும், போக்கிரி ராஜா, படைவீரன் காளி போன்ற படங்களிலும் நடித்துள்ளார் அம்ரிதா.

- Advertisement -

ஆனால், இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது பிகில் திரைப்படம் தான். இந்த படத்திற்கு பின்னர் இவர், கவின் நடிக்கும் ‘லிப்ட்’ என்ற படத்தில் கமிட் ஆகி இருந்தார். இந்த படத்தின் முக்கிய காட்சிகள் ஏற்கனவே படமாக்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் ஒரு சில நாட்களில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்திருக்கிறது. இப்படி ஒரு நிலையில் நடிகை அமிர்தா லிப்ட் படக்குழுவினர் மீது அப்செட்டில் ஆழ்ந்திருக்கிறார்.

அதற்கு முக்கிய காரணமே படக்குழுவினர் அமிர்தாவிடம் கலந்து பேசாமலேயே இவருக்கு பதிலாக படத்தில் வேறு ஒரு பெண்ணை டப்பிங் பேச செய்துள்ளனர். இது குறித்து பேசிய உள்ள அமிர்தா தான் ஒரு தமிழ் பெண் தான் என்றும், எனக்கு பதிலாக வேறு ஒரு பெண்ணை டப்பிங் பேச வைக்க முடிவெடுக்கும் முன்னர் தன்னிடம் அதைப்பற்றி கலந்து பேசி இருக்கலாம் என்று கூறியுள்ளார். மேலும் நான் படக்குழுவிடம் இருந்து வெறும் மரியாதைதான் எதிர்பார்க்கிறேன் என்றும் தனது வேதனையை பகிர்ந்திருக்கிறார் அமிர்தா.

-விளம்பரம்-
Advertisement