கமல் போட்ட விளக்கப்படம்.! இந்த விதியை தான் கவின் மற்றும் லாஸ்லியா மீறினார்களா.!

0
19583
kavin-kamal

பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த சில வாரமாக ரணகளமாக சென்றாலும் கவின் மற்றும் லாஸ்லியாவின் ரொமான்ஸ் குது குளமாக தான் போய் கொண்டு இருக்கிறது. சாக்க்ஷி இருந்த வரை கொஞ்சம் அடக்கி வாசித்து கொண்டிருந்த இவர்கள் இருவரின் ரொமான்ஸுக்கு தற்போது யாரும் தடை போட ஆளில்லலை என்று ரொமான்ஸை அள்ளி வீசி வருகின்றனர்.

kavin-losliya

தற்போது லாஸ்லியாவும் கவின் மீது அதிக ஈர்ப்பில் தான் இருந்து வருகிறார். கவின் மற்றும் லாஸ்லியா இரவு நேரத்தில் தனியாக பேசுவதை சாண்டி கூட கண்டித்தார். ஆனால், இவர்கள் இருவரும் யார் பேச்சையும் கேப்பதாகவும் இல்லை என்பது தெளிவாக தெரிந்து விட்டது.

- Advertisement -

அதே போல பகல் முழுவதும் ஒன்றாகவே இருக்கும் இவர்கள் இரவானால் தனியாக அமர்ந்து பேசிக்கொண்டும் இருக்கின்றனர். அதனை சாண்டி, சேரன் கூட கண்டித்தனர். இந்த நிலையில் இன்று வெளியான இரண்டாவது ப்ரோமோவில் கமல் இந்த வாரம் ஏன் லக்ஸரி பட்ஜெடடில்் இருந்து மதிப்பு குறைக்கப்பட்டது எண்டபத்தை விவரித்து விளக்கப்படம் ஒன்றை போட்டு காண்பித்தார்.

அதில் கவின் மற்றும் லாஸ்லியா இருவரும் இரவு நேரத்தில் ஒன்றாக பேசிக்கொண்டு இருந்தனர். இதனால் கவின் மற்றும் லாஸ்லியா என்ன விதியை மீறினார்கள் என்று குழப்பம் ஏற்பட்டு. அது வேறு ஒன்றும் இல்லை லாஸ்லியா கவினிடம் மைக்கில் கை வைத்து பேசியுள்ளார்.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியை பொறுத்த வரை விதிகள் மிகவும் கடுமையாக பின்பற்றி வருவதை இப்படி அடிக்கடி நிரூபித்துக்கொண்டு தான் இருக்கின்றனர்.

Advertisement