முகம் சுழிக்கும் வகையில் சாண்டி செய்த செயல்.. சர்ச்சையை ஏற்படுத்திய கவினின் பதிவு..

0
16321
kavin-sandy
- Advertisement -

தமிழில் விஜய் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழக மக்களிடையே அதிக வரவேற்பையும் ஆதரவையும் பெற்றது. விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மத்த ரெண்டு சீசன்களை விட இந்த சீசன் 3 வேற லெவல் கூட சொல்லலாம். மேலும், இந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி கடந்த வாரம் திருவிழா போன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டும் சிறப்பாகவும் முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் நம்ம உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் தான்.பிக் பாஸ் நிகழ்ச்சின்னா எல்லாருக்கும் தெரிஞ்சதுதானே 105 நாட்கள், 16 போட்டியாளர்கள், கேமராக்கள், எந்த ஒரு தகவல் தொடர்பும் இல்லாமல் இருப்பதுதான். மேலும், பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அனைவரும் சிறப்பாகவும், தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தியும் விளையாடி வந்தார்கள்.

-விளம்பரம்-

இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டிற்கு வந்த 16 போட்டியாளர்களில் இருந்து இறுதி சுற்றுக்கு 4 பேரை மட்டும் தேர்வு செய்தார்கள். அது சாண்டி,முகென்,லாஸ்லியா, ஷெரின். நாம எல்லாருமே எதிர்பார்த்தது தர்சன் தான் வெற்றி பெறுவார் என்று. ஆனால், கமல்ஹாசன் அவர்கள் கூறியதுபோல் எதிர்பாராததை எதிர் பார்க்கலாம் என்று கூறியது போலவே நடந்துவிட்டது. இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 3ன் டைட்டில் வின்னருக்கு 50 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும், பிக்பாஸ் பட்டத்தையும் கொடுப்பார்கள். இப்போ இந்த பிக் பாஸ் சீசன் 3ன் வெற்றியாளரின் முகென் தான். இரண்டாவது இடத்தை சாண்டியும், மூன்றாவது இடத்தை லாஸ்லியாவும் பிடித்துள்ளார்கள்.

இதையும் பாருங்க : தனுஷுக்கு வில்லனாக சிம்பு.. வைரலாகும் வெற்றிமாறனின் ட்விட்டர் பதிவு..

- Advertisement -

இது மட்டும் இல்லைங்க பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி என்றாலே எல்லோருக்கும் ஞாபகம் வருவது லாஸ்லியா,கவின் காதல் தங்க.ஏன்னா, அந்த அளவுக்கு பரபரப்பையும் சர்ச்சையை ஏற்படுத்திய விஷயம். மேலும், கவின் தன்னுடைய காதல் குறித்து லாஸ்லியாவிடம் வெளிப்படையாக சொன்னார். ஆனால், லாஸ்லியா மழுப்பியவாறே பதில் கூறிக் கொண்டு வந்தார். மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கும் நேரத்தில் கூட லாஸ்லியா என் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியிருந்தார். அதை தொடர்ந்து இவர்கள் காதல் குறித்து வெளியே வந்து கூட எதுவும் தெரிவிக்கவில்லை.

இதனை தொடர்ந்து, பிக் பாஸ் சீசன் 3 முடிந்த உடனேயே சாண்டி அவர்கள் பாய்ஸ் குரூப்புக்கு பார்ட்டி வைத்திருந்தார். இதில் கவின்,முகென், தர்ஷன், அபிராமி அனைவரும் கலந்துகொண்டனர். ஆனால்,லாஸ்லியா வரவில்லை.மேலும்,பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது “வி ஆர் தி பாய்சு “என்ற பாடல் மூலம் பிரபலமானவர்கள் தான் இந்த பாய்ஸ் அணி. மேலும், இந்த பார்ட்டியை தொடர்ந்து சாண்டியும், கவினும் ஒருவர் ஒருவர் வீட்டுக்குச் சென்று சந்தோஷமாக கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது சாண்டியும், கவினும் “வி ஆர் தி பாய்சு” போட்ட பனியனை போட்டுக் கொண்டு புகைப்படங்களை எடுத்துள்ளார்.

-விளம்பரம்-

மேலும், இந்த புகைப்படங்களை கவின் தனது இணையங்களிலும் பதிவு செய்துள்ளார்கள். அதில் உள்ள ஒரு புகைப்படத்தில் சாண்டி பாத்ரூம் கதவை திறந்து வைத்து போன் பேசிக் கொண்டே சிறுநீர் கழிப்பது போன்ற புகைப்படத்தை கவின் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதுவும் ஒருவிதமான ஜாலியாக தான் இருக்கிறது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். இருப்பினும் ஒரு சில ரசிகர்கள் கழிவறையில் எடுத்த புகைப்படங்களை எல்லாமா பதிவிடுவது என்று இந்த புகைப்படத்தை சர்ச்சையாக பார்த்து வருகின்றனர்.

Advertisement