பிக் பாஸ் மேடையில் வெளியேறியதற்கான காரணத்தை சொன்ன கவின்.! எஸ்க்ளுசிவ் அப்டேட்.!

0
3279
Kavin
- Advertisement -

விஜய் டிவி தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது பிக்பாஸ் நிகழ்ச்சி.இன்னும் 10 நாட்களில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் யார்? என்று தெரிந்துவிடும். மேலும், மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த தருணத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது பிக்பாஸ் நிகழ்ச்சி.

-விளம்பரம்-

இந்த நிலையில் பிக் பாஸ் அறிவித்த 5 லட்ச ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு கவின் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய கவின் முதலில் தனது தாயின் நிலைமையை அறிந்து நேராக தனது தாயையும் அவரது உறவினர்களையும் பார்த்துள்ளார் என்று செய்துகள் வெளியாகி இருந்தது.

- Advertisement -

இந்த நிலையில் கவின் தனது தாயை ஜாமினில் எடுத்துள்ளதாகவும், மேலும் பணத்தை ஏமாற்றியதாக கூறி வழக்கு தொடர்ந்த நபர்களுக்கு 29 லட்ச ரூபாயை அளிப்பதாக உத்தரவு அளித்துள்ளதாவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இன்றைய நிகழ்ச்சியில் கவின் பிக் பாஸ் மேடைக்கு வந்துள்ளார்.

இன்றைய நிகழ்ச்சி ஹாட் ஸ்டார் ப்ரீமியம் நேயர்களுக்கு மட்டும் 9 மணிக்கே துவங்கியது. இன்றைய நிகழ்ச்சியில் பேசிய கவின், என்னால் லாஸ்லியாவின் கேம் பாதித்தது என்று நினைத்தேன்.இதனால் நான் இறுதி வாரத்திற்கு முன் வெளியேற வேண்டும் என்று நினைத்தேன். குறிப்பாக அனைவரின் குடும்பங்கள் உள்ளே வந்த அந்த வாரம் தான் நான் மிகவும் வருத்தப்பட்டேன். என்னால் லாஸ்லியா பாதிக்கபட்டுள்ளார் என்று உணர்ந்தேன் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement