லாஸ்லியா கூட இல்லயாம். இவருடன் டேட்டிங் செல்ல தான் கவினுக்கு விருப்பமாம்.

0
24763
kavin-Los
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை சேர்ந்தவர் கவின்.இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “சரவணன் மீனாட்சி” என்ற தொடரில் வேட்டையின் என்ற கதாபாத்திரத்தின் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலமானர். இதனைத் தொடர்ந்து “நட்புனா என்னனு தெரியுமா” என்ற படத்தில் கதாநாயகன் நடித்து உள்ளார். தற்போது கவின் அவர்கள் ஒரு சில படங்களில் கமிட் ஆகி உள்ளார் என்ற தகவல் வந்து உள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்தவரை நடிகர் கவின் தான் காதல் மன்னனாக இருந்து வந்தார்.

-விளம்பரம்-
kavin

இவரும் லாஸ்லியாவும் செய்த ரொமான்ஸ் இன்றளவும் இளசுகள் மத்தியில்பேசப்பட்டு வருகிறது. இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் ரசிகர்கள் விரும்பி வருகின்றனர். இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கவின் இடம் நீங்கள் யாருடன் டேட்டிங் செல்ல விரும்புகிறீர்கள் என்று கேட்கப்பட்டது. பலரும் லாஸ்லியாவின் பெயரை கூறுவார் என்று ஆசைப்பட்ட நிலையில் செல்வராகவனுடன் டேட்டிங் செல்ல விரும்புவதாக கூறிய கவின், அவரைப் பற்றி நிறைய கற்றுக்கொள்ள விரும்புவதால் அவருடன் டேட்டிங் செல்ல விரும்புவதாகவும் கூறியுள்ளார் கவின்.

- Advertisement -

இது ஒருபுறம் இருக்க இயக்குனர் செல்வராகவன் சமீபத்தில் ஒரு ட்விட்டர் ஒன்று பதிவிட்டு உள்ளார். அதில் அவர் கூறியது, “இருட்டினிலே நீ நடக்கையிலே உன் நிழலும் உன்னை விட்டு விலகி விடும். நீ மட்டும் தான் இந்த உலகத்திலே உனக்கு துணை என்று விளங்கி விடும். விடையை நீ உனக்குள் தான் தேட வேண்டும்” என்ற வரியை போட்டு உள்ளார். இதற்கு பத்தாயிரத்திற்கும் மேலான ரசிகர்கள் லைக் செய்தும், ஷேர் செய்தும் வந்தனர். அதை கவின் அவர்கள் ஷேர் செய்தும், லைக் செய்தும் #லைப் என்று பதிவிட்டிருந்தார் கவின் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும், இயக்குனர் செல்வராகவன் அவர்கள் நடிகர் எஸ்.ஜே.சூர்யாவை வைத்து “நெஞ்சம் மறப்பதில்லை” என்ற படத்தை எடுத்து உள்ளார். இந்த படம் குறித்து நான் பல எதிர்பார்ப்புகளுடன் உள்ளேன் என்று கூறி உள்ளார். இப்படி ஒரு நிலையில் செல்வராகவன் செய்த டீவீட்டிற்கு கவின் ஏன் ரிப்லை கொடுத்துள்ளார் ஒருவேளை நடிகர் கவின் அவர்கள் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் படத்தில் நடிக்க கொக்கி போகிறாரா என்றும் பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

-விளம்பரம்-
Advertisement