வேண்டுமென்றே அனைவர் முன்பும் கவினை அசிங்கப்படுத்திய சாக்க்ஷி.! எச்சரித்த கவின்.!

0
6213
Kavin-Sakshi
- Advertisement -

பிக் பாஸ் வீட்டிற்குள் யாரும் எதிர்பாராதவிதமாக சாக்க்ஷி, மோகன் வைத்தியா, அபிராமி ஆகிய மூவரும் சிறப்பு விருந்தினராக மீண்டும் அழைத்து வரப்பட்டுள்ளனர் இவர்களின் வருகைக்கு மற்ற போட்டியாளர்கள் மகிழ்ச்சி அடைந்தாலும் சாக்க்ஷியின் வருகையால் கவின் மற்றும் லாஸ்லியா கொஞ்சம் கடுப்பாக தான் இருக்கின்றனர்.

-விளம்பரம்-

- Advertisement -

சாக்க்ஷி பிக் பாஸ் வீட்டில் இருந்தவரை ஆரம்பத்தில் கவினிடம் மிகவும் நெருக்கம் காண்பித்து வந்தார். ஆனால், லாஸ்லியாவால் இவர்கள் இருவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டது இதனால் சாக்ஷி மற்றும் கவின் இருவருக்கும் ஒருசில மோதல்கள் வந்து இருந்தது. இதனால் கவின் மீது கொஞ்சம் கடுப்பில் இருந்து வருகிறார் சாக்ஷி. மேலும், வெளியே போன சாக்ஸி மீண்டும் உள்ளே வந்ததும் கொஞ்சம் உஷாராகிவிட்டார் கவின்.

இதையும் பாருங்க : இறுதியில் போட்டியாளர்கள் மீதே போலீசில் புகார் அளித்த மதுமிதா.! யார் மீது தெரியுமா ? 

சாக்க்ஷியிடம் எந்த வார்த்தையை விட கூடாது என்று மிகவும் கவனமாக இருக்கிறார் கவின். இந்தநிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் பிக்பாஸ் டாஸ்க் ஒன்று கொடுத்திருந்தார் அதில் போட்டியாளர்கள் இரண்டு குழுவாக பிரிந்தனர் மேலும் அவர்களுக்கு விவாதம் ஒன்றும் நடத்தப்பட்டது. இந்த விவாதத்திற்கு நடுவர்களாக சாக்க்ஷி அபிராமி மோகன் வைத்தியா ஆகிய மூவரும் நடுவர்களாக பங்கேற்றனர். இந்த விவாதத்தின் இடையில் கவின் சாக்க்ஷியிடம் இது பட்டிமன்றம் செய்யும் இடமல்ல பட்டிமன்றம் வேறு டிபேட் (Debate)என்பது வேறு என்று கூறியிருந்தார்.

-விளம்பரம்-

இதனால் கடுப்பான சாக்ஷி எனக்கு பட்டிமன்றம் என்றால் என்னவென்று தெரியும். நீ எனக்கு சொல்லித் தர வேண்டாம் எனக்கு சொல்லித்தர உனக்கு எந்த ஒரு தகுதியும் இல்லை என்று கவினை அனைவர் முன்பும் இன்சல்ட் செய்தார். இருப்பினும் பொறுமையை இழக்காத கவின் அமைதியாகவே இருந்தார். அதன் பின்னர் கூட சாண்டியிடம் தனியாக பேசிய கவின் அவளை என் பக்கம் வராமல் பார்த்துக்கொள் நான் என்ன செய்வேன் என்று தெரியாது என்று எச்சரித்தார். அதற்கு சான்று எக்காரணத்தைக் கொண்டும் வார்த்தையை விட்டு விடாதே என்று கவினை ஆறுதல் செய்தார்

Advertisement