கவின் கூட இல்லையாம்.! இவர் தான் டைட்டில் வெல்லணுமாம்.! சரவணன் மீனாட்சி இயக்குனர்.!

0
14018
saravanan-meenatchi-producer

தொலைக்காட்சி டிவியில் பிரபலமான நிகழ்ச்சியாக பிக் பாஸ் சீசன் 3 நடந்து கொண்டிருக்கிறது. பிக் பாஸ் சீசன் 3 இல் நிறைய வித்தியாசங்களும் ,மாறுதலும் கொண்டு வருவதன் மூலம் மக்களிடையே அதிக பரபரப்பை ஏற்றி உள்ளது. விஜய் டிவி இதற்காக பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக கொண்டு வரும் விளம்பரங்களுக்கு அளவே இல்லை என்றும்,எல்லையை மீறி போகின்றது என்றும் ஒரு சில பேர் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. அதேசமயம் இறுதி சுற்றில் வெற்றியாளராக கவின் தான் இருப்பார் என்ற வியப்பில் ஆழ்த்தும் தகவலும் வந்துள்ளது.

Image result for saravanan meenatchi director

விஜய் டிவியில் நடக்கும் பிக் பாஸ் சீசன் 3 தற்போது இறுதி வாரங்களை நெருங்கி சொல்கிறது . இன்னும் 19 நாட்களே உள்ளது, யார்? வின்னர் என்ற குழப்பத்தில் மக்கள் உள்ளனர்.மேலும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலங்களில் பாதிப்பேர் மீது போலீஸ் புகார்களும், வழக்குகளும் உள்ளன. இந்த சீசன் ரொம்ப ஓவராக காதலும், சண்டைகளும் நடந்துகொண்டிருக்கின்றன.பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது கவினுக்கு தான் ஆதரவு அதிமாக இருந்து வருகிறது. மேலும், கவின் தான் இந்த சீசன் வின்னர் என்றும் பலரும் கூறி வருகின்றனர்.

- Advertisement -

இந்த நிலையில் கவின் இந்த சீசன் வின்னர் இல்லை என்று சரவணன் மீனாட்சி இயக்குனர் தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சரவணன் மீனாட்சி சீரியல் தொடரில் கதாநாயகனாக நடித்து வந்தவர் தான் கவின். அதன் மூலம் தான் அவருக்கு சினிமா துறையில் இடம் கிடைத்து. திடீரென்று தனக்கு வாய்ப்பு கிடைத்தவுடன் சீரியலை நிறுத்த முடிவெடுத்தார்.இதனால் இயக்குனர்களும், சீரியலின் சம்பந்தப்பட்ட மற்ற நபர்களும் அவருடன் கெஞ்சியும், கோபப்பட்டும் கேட்டுக் கொண்டனர் . ஆனால் நான் உங்களைப் பார்த்தால் என் வாழ்க்கையில் நான் முன்னேற முடியாது, கடைசி வரை இப்படித்தான் இருக்கணும் என்று அலட்சியமாக கொஞ்சம்கூட பொறுப்புணர்வு இல்லாமல் பதில் கூறிவிட்டு சென்றார். இதனால்தான் இந்த சீரியலை நாங்கள் சீக்கிரமாக முடித்தோம் என்று மனக்குமுறல் உடன் இயக்குனர் பிரவீன் கூறினார்.

pradeep

சமீபத்தில் மற்றும் ஒரு பேட்டியில் பங்கேற்ற இயக்குனர் பிரவீனிடம் இந்த சீசன் வின்னர் யாராக இருப்பார் என்று கேள்வி கேட்கபட்டிருந்தது. அதற்கு சற்றும் யோசிக்காமல் சாண்டியின் பெயரை சொன்னார் பிரதீப். அப்போது கவின் வெற்றி பெற வேண்டாமா என்று கேட்கப்பட்டதற்கு கவினும் வெற்றி பெற தகுதியுடையவர் தான் ஆனால், சாண்டி வெற்றி பெற்றால் நன்றாக இருக்கும், அவர் தான் இந்த சீசன் வின்னர் என்றும் கூறியுள்ளார் பிரதீப்.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.


Advertisement