சாண்டியின் செல்ல மகள் லாலாவுடன் சைக்கிள் ஓட்டும் கவின்.! வைரலாகும் வீடியோ.!

0
4816
kavin-sandy
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிறைவடைந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களால் பெரிதும் கவனிக்கப்பட்டவர் நடிகர் கவின். கவின் கடந்து அவ்வளவு எளிதான விசயம் அல்ல, படிக்கும்போதே ஆர்ஜே மற்றும் எஃப்எம் சேனல்களில் பணியாற்றினார்.சினிமா துறையில் மீது இருந்த ஆர்வத்தினால் முதலில் நண்பர்களின் உதவியால் குறும்படங்கள் நடிக்க ஆரம்பித்தார். மேலும் நடிப்பைக் கற்றுக் கொள்ள கூத்துப்பட்டறையில் சேர்ந்து மூன்று மாதங்கள் பயிற்சியும் எடுத்துக் கொண்டார்.

-விளம்பரம்-

மேலும், இவர் சின்ன சின்ன ஷார்ட் பிலிம் படத்தில் கூட நடித்துள்ளார். இவர் நடித்த குறும்படங்களின் மூலமாக தொலைக்காட்சிகளில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது.மேலும், 2011 ஆம் ஆண்டு முதன் முதலில் விஜய் டிவி தொலைக்காட்சியில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ” கனா காணும் காலங்கள்” சீரியல் மூலம் தன்னுடைய வாழ்க்கையை தொடங்கினார். அதற்கு பின் பிரபலமான சீரியல் ஆன சரவணன் மீனாட்சி சீரியலில் முருகன் என்ற சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். இதன் மூலம் இவருடைய நடிப்பினால் அவருக்கு சரவணன் மீனாட்சி தொடரில் ‘வேட்டையன்’ என்கிற சரவண பெருமாள் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே அதிக வரவேற்ப்பையுயும், அன்பையும் பெற்றார்.

- Advertisement -

இதற்கு பிறகு இவருக்கு 2015ஆம் ஆண்டு கவின் சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் அவருக்கு ‘நட்புன்னா என்னன்னு தெரியுமா’ என்ற படத்தில் ஹீரோவாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.இன்று நேற்று நாளை, முடிசூடா மன்னன் ஆகிய படங்களில் கௌரவ வேடத்தில் நடித்து வந்தார். அதற்காக மக்களிடையே அதிக வரவேற்பை பெற்ற நம்பர் 1 சீரியல் சரவணன் மீனாட்சி சீரியலில் நடிப்பதை நிறுத்திவிட்டு படத்தில் நடிக்க சென்றார். இந்த நிலையில் தற்போது விஜய் டிவி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். மேலும், இந்த பிக் பாஸ் வீட்டில் கவின் மீது எழுந்த சர்ச்சைகள் அவருடைய பெயர் கேடுக்கும் அளவிற்கு இருந்தது.

சில வாரங்களுக்கு முன்னால் பிக் பாஸ் குழு இந்த வீட்டை விட்டு வெளியேறும் நபருக்கு 5 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்தவுடன் எதையும் யோசிக்காமல் நான் வெளியே போகிறேன் என்று கவின் திடீரென்று வெளியேறினார். இதனால் மக்களிடையே அதிக அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் நட்புக்காக எதையும் செய்யக் கூடியவர் என்பது இந்த செயலின் மூலம் தெரிந்தது. அவர் பலமுறை பிக் பாஸ் வீட்டில் நட்புக்காக நான் எதையும் செய்வேன். அவர்களுக்கு விட்டுக்கொடுக்கவும் நான் தயாராக உள்ளேன். இந்த நிகழ்வுகளால் பணத்திற்காக அதை எடுத்துக் கொண்டு செல்லவில்லை நட்பின் இலக்கணமாக திகழ்ந்தார் கவின்.

-விளம்பரம்-

கவின் பிக் பாஸ் வீட்டில் இருந்த வரை அவருக்கும் உறுதுணையாக இருந்தது சாண்டி தான். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னரே இருவரும் ஒருவருக்கொருவர் பரிட்சம் தான் என்றாலும் பிக் பாஸ் வீட்டில் தான் இவர்கள் இருவருக்கும் நெருக்கம் அதிகரித்தது. கவின் பல முறை சாண்டியை விட்டு கொடுத்தாலும் சாண்டி என்றுமே கவினை விட்டு கொடுத்தது இல்லை. பொதுவாக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அணைத்து போட்டியாளர்களும் சக போட்டியாளர்களின் குடும்பங்களை நேரில் சந்திப்பது வழக்கம்.

அந்த வகையில் கவின் சாண்டியின் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தை சந்தித்துள்ளார். மேலும், சாண்டியின் அன்பு மகளான லாலாவுடன் விளையாடியும் மகிழிந்துள்ளார் கவின். இந்த வீடியோ தற்போது சமூக வளைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது .

Advertisement