பிக் பாஸ் முடிந்தும் இப்படி வன்மத்தை கக்கிட்டு இருப்பீர்களா – BB கொண்டாட்டத்தில் கூட மாய்ந்து கொண்ட அசீம் – விக்ரமனால் கடுப்பான ரசிகர்கள்.

0
821
azeem
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தான் நிறைவடைந்தது 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியில் அசீம், விக்ரமன் சிவின் ஆகிய மூன்று பேர் தகுதி பெற்று இருந்தார்கள். இதில் அசீம் முதலிடத்தையும் அவரைத் தொடர்ந்து விக்ரமன் மற்றும் சிவின் ஆகிய இருவரும் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை பிடித்து இருந்தார்கள். முதல் பட்டத்தை வென்ற அசிமிற்கு 50 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது. மேலும், அவருக்கு சிறப்பு பரிசாக ஒரு புதிய மாருதி கார் வழங்கப்பட்டு இருந்தது.

-விளம்பரம்-

இந்த சீஸனில் விக்ரமன் தான் வெல்வார் என்று பலரும் எதிர்பார்த்துவந்தனர். இப்படி ஒரு நிலையில் அசீம் வென்றதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் இந்த முடிவால் அதிருப்தி அடைந்து இருக்கின்றனர். அப்போ அடாவடியாக ஆடி, மற்றவர்களை இழிவுபடுத்தி விளையாடினால் பிக் பாஸில் வென்று விடலாமா என்று கேள்விகளை எழுப்பி வருகின்றனர். மேலும், விஜய் டிவிக்கு எதிராக Boycott விஜய் டிவி என்று ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வரும் ரசிகர்கள் விக்ரமன் ஹேஷ் டேக்கையும் ட்ரெண்ட் செய்து வந்தனர்.

- Advertisement -

இந்த சீசனில் பலரும் விக்ரமன் தான் வெற்றிபெறுவார் என்று எதிர்பார்த்த நிலையில் அசீம் வெற்றி பெற்றது பெருத்த அதிர்ச்சியை கொடுத்து இருந்தது. அதே போல பிக் பாஸ் கோப்பையை கமல், விக்ரமனை வைத்து தான் அஸீமிற்கு கொடுக்க வைத்தார். கோப்பையை வாங்கியதும் அசீம் கொண்டாட்டத்தில் ஆராவாரம் செய்ய அஸீமிடம் இருந்து ஒதுங்கி நின்ற கமல், விக்ரமன் அருகில் சென்று அவரை ஆஸ்வாசப்படுத்தினார்.

அதே போல என்னதான் அசீம் பட்டத்தை வென்றாலும் பிக் பாஸ் முடிந்ததில் இருந்தே விக்ரமன் தோற்றத்தை பற்றி தான் சமூக வலைதளத்தில் பேசி வருகின்றனர். அசீம் வெற்றி பெற்றது பிக் பாஸ் 6ல் கலந்துகொண்ட ஷிவின், மகேஸ்வரி,ரச்சிதா போன்றவர்களுக்கே பிடிக்கவில்லை. மேலும், பிக் பாஸ் முடிந்த பின்னரும் அசீம் – விக்ரமன் இருவரும் பேட்டிகளில் தங்களை மாறி மாறி விமர்சனம் செய்துகொண்டு தான் இருக்கின்றனர்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியிலும் அசீம் – விக்ரமன் இருவரும் சண்டையிட்டு கொண்டுள்ளனர். பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைவடைந்தாலே பிக் பாஸ் கொண்டாட்டம் என்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு அதில் பிக் பாஸ் பிரபலங்கள் அனைவரும் கலந்து கொள்வது வழக்கம். அந்த வகையில் இந்த சீசனுக்கான பிக் பாஸ் கொண்டாட்ட நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறது சமீபத்தில் நான் இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ ஒன்று வெளியாகி இருந்தது.

அதில் போட்டியாளர்கள் அனைவருக்கும் ஒரு துண்டு சீட்டில் கேள்விகள் கேட்கப்பட்டது. அப்படி விக்ரமனுக்கு பிக் பாஸ் வீட்டில் gossip guy யார் என்ற கேள்வி வந்து இருந்தது. அதற்கு விக்ரமன் ,அஸீமின் பெயரை சொல்ல,உடனே அசீம் ‘இப்படி பேசுபவர்களே ஆயிரம் gossip பேசியிருக்கிறார்கள் அவங்க சொல்லும்போது தான் எனக்கு சிரிப்பாக இருக்கிறது’ என்று கூறி உள்ளார். இந்த ப்ரோமோவை கண்ட பலரும் பிக் பாஸ் முடிந்தும் இப்படி வன்மத்தை கக்கி கொண்டு இருப்பீர்களா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Advertisement