போடு சூப்பர் – இந்த வாரமும் ஒரு குறும்படம் இருக்கு. அதுவும் யாருக்குனு பாருங்க.

0
6131
kamal
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் 61 நாட்களை நிறைவு செய்து இருக்கிறது. இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா ஆகியோர் வெளியேறிய நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சம்யுக்தா வெளியேறி இருந்தார். மற்ற போட்டியாளர்கள் வெளியேறியதைவிட சம்யுக்தாவின் வெளியேற்றம் தான் கொஞ்சம் பரபரப்பாக பேசப்பட்டது. அதற்கு முக்கிய காரணமே இவர் வெளியேறுவதற்கு முன்பாக இவருக்கு குறும்படம் போடப்பட்டு இருந்தது. அதே மற்ற போட்டியாளர்கள் வழி அனுப்பி வைக்கப்பட்ட விதத்தை விட சம்யுக்தாவை மற்ற போட்டியாளர்கள் வழியனுப்பி வைத்த விதம் மிகவும் நன்றாக இருந்தது என்று தான் சொல்ல வேண்டும்.

-விளம்பரம்-
balaji

இப்படி ஒரு நிலையில் இன்று கமல், இந்த வாரம் முழுதும் நடந்த பல பிரச்சனையை ஆராய இருக்கிறார். பொதுவாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கமல் வருவதால் நிகழ்ச்சி கொஞ்சம் சுவாரசியமாக இருக்கும்.மேலும், அந்த வாரம் முழுவதும் நடைபெற்ற பிரச்சினைகளை கமல் அலசி ஆராய்வார். ஆனால், இந்த சீசனில் இதுவரை அப்படி எதுவுமே நடந்தது கிடையாது. அவ்வளவு ஏன் ரசிகர்களுக்கு அறிவுரை என்பதை கூறுவதற்கு பதிலாக டிப்ஸ் என்றுதான் கூறி வருகிறார்.

- Advertisement -

ஆனால், கடந்த வாரம் சம்யுக்தாவிற்கு குறும்படம் போட்டு மக்களின் குறையை தீர்த்து வைத்தார் பிக் பாஸ் . இப்படி ஒரு நிலையில் இந்த வாரமும் ஒரு குறும்படம் இருக்கிறது. அது வேறு யாருக்கும் இல்லை பாலாஜிக்கு தான். அது வேற எதுவும் இல்லை. கடந்த வாரம் தலைவர் பதவிக்கான போட்டியில் ரம்யா, ஜித்தன் ரமேஷ், பாலாஜி ஆகியோர் பங்கேற்ற போது பாலாஜி தனது தவறை ஒப்புக்கொள்ளாமல் அனைவரிடமும் வாக்கு வாதம் செய்தார். இதில் முக்கியமாக ஆரி மற்றும் பாலாஜிக்கு தான் கடும் வாக்கு வாதம் நடைபெற்றது.

இந்த விஷயத்தில் இந்த டாஸ்கின் போதே பிக் பாஸ் ஒரு சிறு குறும்படத்தை போட்டுக் காண்பித்தார். ஆனால், இந்த டாஸ்க் முடிந்த பின்னரும் பாலாஜி, அடிக்கடி ஆரி, மாத்தி மாத்தி பேசுகிறார். அவர் பொய் சொல்லிவிட்டார் என்று சதா புலம்பிக்கொண்டே இருந்தார். இதற்கு ஒரு தீர்வை காணும் வகையில் பாலாஜிக்கு குறும்படம் போடப்பட்டுள்ளதாம். ஏற்கனவே சனம் பேசியதால் தன்னை செருப்பால் அடித்துக்கொண்டு பாலாஜியை கமல் கண்டித்து இருந்தார் என்பது இன்று வெளியான மூன்றாம் ப்ரோமோவில் உறுதியானது.

-விளம்பரம்-

Advertisement