இது எங்களின் தவறல்ல, தலைவிரித்து ஆடும் இலங்கை பிரச்சனை குறித்து லாஸ்லியாவின் உணர்வுபூர்வமான பதிவு.

0
453
losliya
- Advertisement -

இலங்கை பிரச்சனை குறித்து பிக்பாஸ் பிரபலம் லாஸ்லியா பதிவிட்டுள்ள உணர்வுபூர்வமான பதிவு தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பிரபலமடைந்து வரும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்கள் மத்தியில் பிரபலமானவர் லாஸ்லியா. இவர் தமிழக இலங்கை நாட்டின் செய்தி தொகுப்பாளராக பணியாற்றியவர். பின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் இவர் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் மத்தியில் பிரபலமாகி விட்டார். அதுமட்டுமில்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போதே இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் சேர்ந்துள்ளது.

-விளம்பரம்-

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகும் கவிலியா காதல் குறித்து பல கிசுகிசுக்கள் வந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இருந்தும் இருவரும் அவரவர் வழியில் பயணிக்க ஆரம்பித்து விட்டார்கள். அதுமட்டுமில்லாமல் இவர்களுடைய காதல் என்ன ஆனது? என்று குழப்பத்தில் இருந்த ரசிகர்களுக்கு கவின் விளக்கம் கொடுத்து இருந்தார். அதில் அவர் நான் சிங்கிள் தான், எனக்கான காதலை தேடி கொண்டு இருக்கிறேன், கிடைக்கவில்லை என்று கூறி இருந்தார். அதேபோல் லாஸ்லியாவும் செட் ஆகவில்லை பிரிந்து விட்டோம் என்று அறிவித்து இருந்தார். இதன் மூலம் இருவரும் பிரிந்து விட்டார்கள் என்பது உறுதி ஆகி விட்டது.

- Advertisement -

லாஸ்லியாவின் முதல் படம்:

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு லாஸ்லியா படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அதிலும் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்தபோதே கேஎஸ் ரவிக்குமார் இவருக்கு தமிழ் சினிமாவில் மிகப் பெரிய வாய்ப்புகள் காத்துக் கொண்டிருப்பதாக கூறியிருந்தார். அவர் சொன்னதை தொடர்ந்து பிக் பாஸ்க்கு பின்னர் முதலில் ஆரி நடிக்கும் புதிய படத்தில் லாஸ்லியா கமிட்டானார். அதன் பின்னர் இவர் ஹர்பஜன் சிங் மற்றும் அர்ஜுன் நடித்த பிரண்ட்ஷிப் என்ற படத்தில் நடித்து இருந்தார். ஆனால், ஆரியுடனான படத்திற்கு முன்பாகவே ‘பிரண்ட்ஷிப்’ படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து விட்டது.

லாஸ்லியா நடிக்கும் படம்:

பின் கடந்த சில மாதங்களுக்கு முன்னரே இந்த திரைப்படம் வெளியாகி இருந்தது. இந்த படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இருந்தும் லாஸ்லியாவின் முதல் திரைப்படம் வெற்றி படமாக அமைய வில்லை. இருப்பினும் இவர் தொடர்ந்து படத்தில் நடித்து வருகிறார். தற்போது இவர் தர்ஷன் நடிக்கும் கூகுள் குட்டப்பன் என்ற படத்தில் நாயகியாக நடித்து உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் கூடிய விரைவில் இந்த திரைப்படம் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் தான் இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி இருந்தது. இதனை தொடர்ந்து தற்போது லாஸ்லியா அவர்கள் ஆல்பம் பாடலுக்கு நடனமாடி இருக்கிறார்.

-விளம்பரம்-

லாஸ்லியா-அஸ்வின் ஆல்பம் சாங் :

நடிகர் அஸ்வின் உடன் தான் லாஸ்லியா சேர்ந்து நடனமாடியுள்ளார். அதுமட்டுமில்லாமல் லாஸ்லியா, அஸ்வின் இருவரும் ஏற்கனவே Blesso Beauty soap என்ற விளம்பரத்தில் இருவருமே நடித்திருந்தார்கள். இது தான் லாஸ்லியாவின் முதல் விளம்பரம் என்பது குறிபிடத்தக்கது. தற்போது மீண்டும் இவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து ஆல்பம் பாடலுக்கு நடனமாடி இருக்கிறார்கள். இந்நிலையில் இலங்கையில் தற்போது பொருளாதார நெருக்கடி காரணமாக அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தன்னுடைய சமூக வலைதளங்களில் லாஸ்லியா பதிவு ஒன்றை போட்டு உள்ளார். அதில் அவர் கூறியிருப்பது,

லாஸ்லியா பதிவிட்ட பதிவு:

இலங்கையர்கள் ஆகிய நாங்கள் மிக மோசமான போரை எதிர்கொண்டோம். அதில் எங்கள் குடும்பங்கள் உள்பட அனைத்தையும் இழந்தோம். அதன் பிறகு சுனாமியை எதிர்கொண்டோம், 2019ஆம் ஆண்டு தேவாலயங்களில் குண்டுவெடிப்புகளை எதிர்கொண்டோம், அதன் பிறகு கொரோனா வைரஸ் பாதிப்புகளை எதிர்கொண்டோம், இப்போது பொருளாதார நெருக்கடியை எதிர் கொள்கிறோம். இவை எதையுமே எங்களின் தவறல்ல. நாங்கள் இலங்கையர்கள் என்பதால் இவை அனைத்தையும் எதிர்கொள்ளும் அளவுக்கு நாங்கள் பலமாக இருந்தோம். இப்போது இந்த பரிதாபமான சூழ்நிலையை சமாளிக்க ஒன்றாக இருப்போம். ஒருவருக்கு ஒருவர் ஆதரவு அளிப்போம் எனலாஸ்லியா குறிப்பிட்டு உள்ளார்.

Advertisement