நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் அனைவருக்கும் டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது. அதில் அனைத்து போட்டியாளர்களும் ஒருவர் பின் ஒருவராக மேடையில் நின்று தங்கள் வாழ்வில் மறக்க முடியாத தருணங்களை கூற வேண்டும் என்பதே அந்த டாஸ்க். இதில் பேசிய மோகன் வைத்யா, ரேஷ்மா போன்றவர்களின் கதைகள் ரசிகர்களை கண் கலங்க வைத்தது.
அதிலும் ரேஷ்மா தனது வாழ்வில் நடந்த சோகத்தை பற்றி சொன்னதும் அனைவருமே தேம்பி தேம்பி அழுது விட்டனர். இதில் மோகன் வைத்யா பேசி முடித்ததும் அனைவரும் அவரை கட்டியணைத்து அழுது தங்களது ஆறுதலை தெரிவித்தனர் இதற்குப் பின்னர் மற்ற போட்டியாளர்களை போல லாஸ்லியா சோகமாக அமர்ந்து கொண்டிருந்தார்.
இதையும் பாருங்க : அபிராமியை கட்டிப்பிடிக்க சொல்லி வற்புறுத்திய சாக்க்ஷி, ஷெரின்.! என்ன வேலை இதெல்லாம்.!
அப்போது அவருக்கு எதிரில் இருந்த மோகன் உள்ளம் கேட்குமே படத்தில் வரும் ஓ மனமே பாடலை பாடினார். மேலும், அதனை லாஸ்லியா கவனிக்கிறாரா இல்லையா என்று தனது ஓரக்கண்ணால் பார்த்து உறுதி செய்து கொண்டே இருந்தார் முகுன். முகுன் பாடியதை கேட்டு லாஸ்லியா மீண்டும் கண்களில் கண்ணீர் விடத் தொடங்கினார்.
பின்னர் அவரை அருகிலிருந்த சேரன் ஆசுவாசப்படுத்தினார். அதற்குப் பின்னர் சிறிது நேரம் கழித்து சற்று நார்மலான லாஸ்லியாமுகுநனுடன் சேர்ந்து சற்று ஜாலியாக பாடல் பாட தொடங்கினார் இதனை வைத்துப் பார்க்கும் போது முகநூல் ஆசியாவிற்கும் இடையே ஏதாவது கெமிஸ்ட்ரி ஏற்பட்டுவிடுமோ என்ற எண்ணம்தான் பார்வையாளர்களின் மனதில் தோன்றியது.
ஏற்கனவே கவின் மற்றும் அபிராமியின் கெமிஸ்ட்ரி ஒரு ஒருபுறம் ஓடிக்கொண்டிருக்க இந்த சம்பவத்தை வைத்து பார்க்கும்போது விரைவில் முகம் மற்றும் லாஸ்லியா அவற்றிடையே ஏதாவது பற்றிக்கொண்டு விடுமோ என்றுலாஸ்லியா ஆர்மி மிகுந்த வருத்தத்தில் இருந்து வருகின்றனர்