பிக் பாஸ் வீட்டில் தற்போது லாஸ்லியாவின் தந்தை உள்ளே வந்தது தான் பூகம்பமாக வெடித்துள்ளது. கவின் விஷயத்தில் லாஸ்லியா நடந்து கொண்ட விதத்தால் கடுப்பான லாஸ்லியாவின் தந்தை, இதற்காகவா உன்னை அனுப்பினேன். என்னை அனைவரும் காரிதுப்பும்படி செய்துவிட்டாய் என்று கடுமையாக பேசி இருந்தார்.
லாஸ்லியாவின் தந்தை லாஸ்லியாவை திட்டும் போது இதுநாள் வரை அவருடன் இருந்த பாய்ஸ் கேங் யாரும் அவரது அருகில் கூட வரவில்லை. குறிப்பாக சாண்டி லாஸ்லியாவின் தந்தைக்கு வழிவிட்டு நகர்ந்து சென்றதை பலரும் ட்ரோல் செய்து வருகின்றனர். அதே போல கவின் மீதும் லாஸ்லியாவின் பெற்றோர்கள் கடும் அதிருப்தியில் இருந்தது நேற்று தெளிவாக தெரிந்தது.
லாஸ்லியாவின் தந்தை ,மட்டுமல்ல லாஸ்லியாவின் அம்மா மற்றும் தங்கைகள் கூட, கவினிடம் நீ பழகுவதை நிறுத்து உன்னுடைய விளையாட்டை நீ விளையாடு என்று அறிவுறுத்தினார். இதனால் கவினும் மனம் வருத்தப்பட்டு கண்ணீர் விட்டு அழுதார். ஆனால், லாஸ்லியா அப்போதும் திருந்திய
லாஸ்லியாவின் தந்தை அவ்வளவு திட்டிவிட்டு பின்னர் சேரன் அருகில் அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது தனது அம்மாவுடன் வீட்டிற்குள் நுழைந்த லாஸ்லியா, நீ கவின் கிட்ட பேசுறாயா கேட்டார். ஆனால், அதனை லாஸ்லியாவின் அம்மா உதாசீனபடுத்திவிட்டு கண்டுகொள்ளாமல் சென்று விட்டார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.