தனது முதல் படத்திற்காக லாஸ்லியா பேசிய முதல் வசனம். வைரலாகும் வீடியோ இதோ.

0
7930
losliya
- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில் பங்குபெறும் போட்டியாளர்களுக்கு நிச்சயம் பட வாய்ப்புகளை அமைத்துக் கொடுத்துவிடும் ஒரு பாலமாக இருந்து வருகிறது. முதல் சீசனில் ஜூலி இரண்டாவது சீசனில் ஷாரிக் என்று பல்வேறு நபர்களுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி சினிமாவில் ஒரு என்ட்ரி டிக்கெட்டை போட்டு கொடுத்துள்ளது. அந்த வகையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் முன்றாவது சீசன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமைந்த லாஸ்லியாவும் தற்போது தமிழ் சினிமாவில் கதாநாயகியாக களம் இறங்க இருக்கிறார்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is losliya-abhirami-1222020m1.jpg

பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி இந்த அளவிற்கு பட்டையைக் கிளப்பியதற்கு காரணம் என்று பார்த்தால் அது ‘கவின், லாஸ்லியா’ காதல் தான். முதலில் இவர்கள் இருவரும் நண்பர்களாகத் தொடங்கி காதலர்களாக வலம் வந்தார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்தாலும் இவர்களுடைய காதல் குறித்து இன்னும் சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு தான் வருகிறது. ரசிகர்கள் பலரும் இவர்கள் காதல் குறித்து ஆவலாக எதிர்நோக்கி வந்தனர் என்பது அனைவருக்கும் தெரிந்தே.

- Advertisement -

இதையும் பாருங்க : மகனுக்காக யோசித்து வைத்திருந்த பெயரை மகளுக்கு வைத்துள்ள சினேகா பிரசன்னா ஜோடி.

ஆனால், இவர்கள் இருவரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் அவரவர் வேலைகளை பார்த்து வருகின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் லாஸ்லியா அடிக்கடி போட்டோ ஷூட்களை நடத்தியும் பொது நிகழ்ச்சிகளில் பங்குபெறுவதுமாக இருந்த வந்தார். அதே போல இவருக்கு பல்வேறு விருதுகளும் அடிக்கடி வழங்கப்பட்டது. இந்தநிலையில் லாஸ்லியா, ஹர்பஜன் சிங் உடன் ஒரு படத்திலும் நெடுஞ்சாலை பட நாயகன் ஆரி நடித்துவரும் ஒரு படத்திலும் கமிட் ஆகி இருக்கிறார். ஒரே சமயத்தில் கிரிக்கெட் வீரர் வேணும் பிரபல நடிகர்களும் நஸ்ரியா கமிட்டாகி இருப்பது லாஸ்லியாவின் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

-விளம்பரம்-

இந்த நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் படத்தின் நாயகனான ஆரியின் பிறந்தநாளான இன்று (பிப்ரவரி 12) வெளியிட போவதாக பட குழு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தனது முதல் படத்திற்காக லாஸ்லியா ஒரு சிறிய வசனத்தை பேசியுள்ளார். படத்திலும் லாஸ்லியா சொந்த குரலில் பேச இருக்கிறாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement