சேரன் குறித்து தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு திணறி போய் நின்ற லாஸ்லியா. கோபத்தில் ரசிகர்கள்

0
20637
cheran-los
- Advertisement -

தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி சமீபத்தில் தான் வெற்றிகரமாக முடிவடைந்தது. இந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மத்த ரெண்டு சீசன்களை விட பட்டையைக் கிளப்பியது சொல்லலாம். இந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் மத்த ரெண்டு சீசன்களை விட காதல், கலவரங்கள், சண்டைகளுக்கு பஞ்சமே இல்ல. அந்த அளவிற்கு வேற லெவல்ல போயிருந்தது. இந்த சீசன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மீண்டும் பேசப்பட்டார் இய்குனார் சேரன். இயக்குனர் சேரன் அவர்கள் திரையுலகில் மட்டுமல்ல இயல்பான வாழ்க்கையிலும் சிறந்தவர் என்று இந்த பிக் பாஸ் வீட்டில் நிரூபித்து விட்டார். இயக்குனர் சேரன் அவர்கள் நடிகர், இயக்குனர் என பல முகங்களை கொண்டவர். மேலும், இவர் ஆட்டோகிராப், சொல்ல மறந்த கதை, தவமாய் தவமிருந்து, பொக்கிஷம், ராமன் தேடிய சீதை, யுத்தம் செய் உள்ளிட்ட பல படங்களை இயக்கியும் நடித்தும் உள்ளார். தன்னுடை பல படங்களுக்காக தேசிய விருதுகளை வாங்கி உள்ளார்.

-விளம்பரம்-

சேரன் அவர்கள் கடைசியாக திருமணம் என்ற படத்தை இயக்கி இருந்தார். அதற்கு பின் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கவின் மற்றும் லாஸ்லியாவின் காதல் கதை தான் ஹைலைட்டாக இருந்தது. கவின் மற்றும் லாஸ்லியா பிக்பாஸ் வீட்டில் இருந்த போது இவர்களது உறவை பற்றி அதிகம் கவலைப்பட்டது சேரன் தான். சேரன் அவர்கள் லாஸ்லியாவிற்கு ஒரு தந்தை போலத் தான் பழகி வந்தார். அதே போல லாஸ்லியா சேரன் பற்றி சொன்னால் கவினுக்கு மிகவும் கோபத்தை ஏற்படுத்தி இருந்தது.

இதையும் பாருங்க : கையில காசு இல்ல, அவரின் மருத்துவ செலவிற்காக தான் கிளாமராக நடிக்க சம்மதித்தேன். நடிகை நீபா வாழ்வில் இப்படி ஒரு சோகமா.

- Advertisement -

இதனால் லாஸ்லியாவிடம் கவினை பிரிக்க சேரனும், சேரனிடம் இருந்து லாஸ்லியாவை பிரிக்க கவினும் பல்வேறு செயல்களை செய்து வந்தார்கள். ஆனால், சேரனின் உண்மையான பாசம் லாஸ்லியாவிற்கு தெரியாமல் போனது. சேரன் அவர்கள் இப்போது வரை கூட லாஸ்லியாவை தன் மகளாக தான் பார்க்கிறார். சோசியல் மீடியாவினால் அண்மையில் மக்கள் மனதை வென்ற பிரபலங்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. அதில் பிக்பாஸ் நாயகி, இலங்கை பெண் லாஸ்லியாவுக்கு கிடைத்தது. இந்த விருது வழங்கும் விழாவிற்கு லாஸ்லியா அவர்கள் வந்து இருந்தார். இவர் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான நபர் என்ற பிரிவில் லாஸ்லியாவுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

அப்போது பிரபல தொகுப்பாளர் ஒருவர் இயக்குனர் சேரன் பிறந்த நாள் எப்போது என்று லாஸ்லியாவிடம் கேள்வி கேட்டு உள்ளார்கள். அதற்கு ஒரு நிமிடம் யோசித்து இறுதியில் எனக்கு அவருடைய பிறந்த நாள் தேதி தெரியாது என்று கூறி விட்டார். மேலும், சேரன் பிறந்த நாள் டிசம்பர் 12 ஆம் தேதி அன்று சாக்ஷி அவர்கள் சேரனின் வீட்டுக்குச் சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்து அவருடைய பிறந்த நாளை கொண்டாடினார். ஆனால், சேரனின் மகளாக இருக்கும் லாஸ்லியாவிற்கு அவருடைய பிறந்த நாள் தெரியவில்லை. இதனால் ரசிகர்கள் லாஸ்லியா மீது கடும் கோபத்தில் இருந்தார்கள். அதுமட்டுமில்லாமல் உண்மையாகவே நீங்கள் சேரனின் மகளாக நடந்து உள்ளீர்களா?? என்றும் விமர்சனம் செய்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.

-விளம்பரம்-
Advertisement