கையில காசு இல்ல, அவரின் மருத்துவ செலவிற்காக தான் கிளாமராக நடிக்க சம்மதித்தேன். நடிகை நீபா வாழ்வில் இப்படி ஒரு சோகமா.

0
74628
neepa
- Advertisement -

கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு தனது நடனத்தால் அனைவரின் கவனத்தயும் ஈர்த்தவர் நீபா. விஜய் தொலைக்காட்சயில் ஒளிபரப்பான ‘கவியாஞ்சலி’ என்ற தொடர் மூலம் சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமானார். பின்னர் பல்வேறு நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட நீபா, பல்வேறு சீரியல்களிலும் படங்களிலும் நடித்துள்ளார். குறிப்பாக விஜய் நடிப்பில் வெளியான காவலன் படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக இவர் நடித்த கதாபாத்திரத்தின் மூலம் சினிமா ரசிகர்களால் மிகவும் அறியப்பட்டார்.

-விளம்பரம்-
Neepa with family

- Advertisement -

சன் டிவியில் ஒளிபரப்பான ‘மஸ்தானா மஸ்தானா’ மற்றும் கலைஞர் டிவியில் ஒளிபரப்பான ‘மானாட மயிலாட’ போன்ற நிகழ்ச்சிகளின் டைட்டில் வின்னராகவும் வந்தார். மேலும், தொடர்ந்து படங்களில் நடித்து வந்த இவர் ரெண்டு படங்களில் டான்ஸ் மாஸ்டராவும் பணியாற்றி இருக்கிறார். காவலன் படத்தை தொடர்ந்து ‘பெருசு’, ‘பள்ளிக்கூடம்’, ‘தோட்டா’, ‘கண்ணும் கண்ணும்’, ‘அம்முவாகிய நான்’ உள்பட பல படங்களில் நடித்த நடிகை நீபா கடந்த 2013 ஆம் ஆண்டு தொழிலதிபர் சிவகுமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இதையும் பாருங்க : இதற்கு செலவழிப்பதற்கு ஈழத்து ஏழைகளுக்கு உதவலாமே. கேள்வி கேட்டவருக்கு செந்தில் கணேஷ் பதிவிட்ட பதில்.

திருமணத்திற்கு பின்னர் இவருக்கு ஒரு அழகான பெண் குழந்தையும் பிறந்தது. குழந்தை பிறந்த பின்பும் ஒரு சில சீரியல்களில் தலை காண்பித்து வந்தார் நீபா. கடந்த 10 ஆண்டுகளாக நீபாவை சினிமாவில் காண முடியவில்லை. இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்றுள்ள நீபாவிடம், திருமணத்திற்கு பின் எவ்வளவு கேப் என்று கேட்கப்பட்றதுக்கு, திருமணத்திற்குப் பின்னர் என் கணவருக்கு நான் நடிப்பதில் விருப்பமில்லை ஆனால் அவரிடம் நிறைய பேர் திறமையான ஒருவரை ஏன் இப்படி வீட்டிற்குள்ளேயே வைத்திருக்கிறார்கள் என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருந்ததால் ஒரு கட்டத்தில் வாய்ப்பு வந்தால் நடிப்பேன் என்று என் கணவர் ஒப்புக்கொண்டார்.

-விளம்பரம்-
serial actress neepa daughter க்கான பட முடிவு

அதன்பின்னர் நான் மீண்டும் நடிக்க வந்தபோது ஒரு விஷயம் மட்டும் தான் நினைவிற்கு வந்தது நீண்டகாலமாகவே கிளாமர் ரோல் செய்பவர்களை நிறைய பேர் தவறாக தான் பேசுகிறார்கள். முன்பெல்லாம் நடிகை தனியாக இருப்பார்கள், கிளாமர் ரோல் பண்ணுவதற்கு என்று தனியாக ஒரு ஆள் இருப்பார்கள். ஆனால் ,இப்போது நடிகைகளை கிளாமராக நடித்து விடுகிறார்கள். இதனால் கிளாமர் ரோல் செய்ய தனியாக ஒருவர் தற்போது தேவை கிடையாது. ஆனால், கிளாமராக நடிக்கும் நடிகைகளை யாரும் தவறாக பேசுவது கிடையாது. யாரையும் அவர்கள் நடிக்கும் கதாபாத்திரங்களை வைத்து விமர்சனம் செய்யாதீர்கள். கிளாமர் ரோல் செய்பவர்கள் வாழ்க்கையும் தப்பாக தான் இருக்கும் என்று நினைக்கிறார்கள். ஆனால், பிக் பாஸ் வீட்டிற்குள் மும்தாஜ் அப்படியா இருந்தார். தினமும் பக்தியுடன் சாமி கும்பிட்டார்.

நீபா

நான் கிளாமர் ரோல் ஏற்றுக்கொண்ட காரணம் என் குடும்ப கஷ்டம் தான். என்னுடைய அப்பாவுக்கு உடம்பு சரியில்லாமல் இருந்தபோது என் கையில் காசு கிடையாது அந்த சமயத்தில் தான் எனக்கு கிளாமர் ரோலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. என் அப்பாவுடைய மருத்துவ செலவிற்கு உதவும் என்று தான் நான் நடிக்க ஒப்புக் கொண்டேன். இப்படி கிளாமராக நடிக்கும் அனைத்து நடிகர்களுக்கும் இதுபோன்ற ஒரு கதை இருக்கும். ஆனால், இது புரியாமல் தவறாக பேசுபவர்களை எண்ணித்தான் எனக்கு கஷ்டமாக இருக்கிறது என்று கூறியுள்ளார் நீபா.

Advertisement