லாஸ்லியா படத்தின் பர்ஸ்ட் லுக் – ட்வீட் செய்த சச்சின் – இன்ப அதிர்ச்சியில் லாஸ்லியா ஆர்மி.

0
23576
los
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் லாஸ்லியா. இவர் இலங்கையை பூர்வீகமாக கொண்டவர். லாஸ்லியா செய்தி வாசிப்பாளராக தான் தனது பயணத்தை தொடங்கினார். பின் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் மக்களிடையே அதிக வரவேற்பையும், ரசிகர் பட்டாளத்தையும் சேர்த்தார். இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி இந்த அளவுக்கு சூப்பர் ஹிட் ஆனதே கவின்– லாஸ்லியா காதல் தான். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு லாஸ்லியாக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

-விளம்பரம்-

மேலும், லாஸ்லியா மற்றும் ஹர்பஜன் சிங்க் இணைந்து நடிக்கும் படம் ஃப்ரெண்ஷிப். இந்திய கிரிக்கெட் அணியில் மிகப் பிரபலமான வீரர் ஹர்பஜன் சிங். இவர் கிரிக்கெட் தவிர சினிமா படங்களிலும் நடித்து வருகிறார். இந்த படத்தை சியண்டோவா ஸ்டுடியோ, சினிமா ஸ்டுடியோ நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகிறார்கள். ஜான் பவுல் ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இணைந்து இந்த படத்தை இயக்குகின்றனர்.

- Advertisement -

இந்த படத்தில் ஹர்பஜன் சிங்குக்கு ஜோடியாக லாஸ்லியா நடிக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிக்கிறார். இந்நிலையில் இந்த படத்தில் லாஸ்லியாவின் லுக் எப்படி இருக்க போகிறது என்று பலரும் எதிர்பார்த்து கொண்டு இருந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருந்தது.

இந்த நிலையில் கிரிக்கெட் உலகின் கடவுள் என்று கருதப்படும் சச்சின் டெண்டுல்கர் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்து ட்வீட் செய்துள்ளார். அதில், பிரென்ட்ஷிப், இந்த படத்தை பார்க்க வேண்டும். சச்சின் இப்படி ட்வீட் செய்ததற்கு ஹர்பஜன் தான் காரணம் என்றாலும், லாஸ்லியாவின் முதல் படத்திற்கு சச்சின் ட்வீட் செய்துள்ளது லாஸ்லியா ரசிகர்களை பெரும் இன்பக் கடலில் ஆழ்த்தியுள்ளது.

-விளம்பரம்-
Advertisement