தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி கடந்த ஆண்டு வெற்றிகரமாக சிறப்பாக முடிவடைந்தது. மேலும், இந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மத்த இரண்டு சீசன்களை விட மாஸ் காட்டியது. அதோடு இந்த பிக் பாஸ் 3ல் நடந்த சர்ச்சைகளுக்கும், காதல்களுக்கும் பஞ்சமே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு நிகழ்ச்சியில் பூகம்பமே கிளம்பியது. அதிலும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி இந்த அளவிற்கு பட்டையைக் கிளப்பியதற்கு காரணம் என்று பார்த்தால் அது ‘கவின், லாஸ்லியா’ காதல் தான்.
முதலில் இவர்கள் இருவரும் நண்பர்களாகத் தான் இருந்தார்கள். பின்னர் நாட்கள் செல்லச் செல்ல இருவருக்கும் காதல் மலர்ந்தது. மேலும்,இதுவரை வந்த பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சிகளிலேயே கவின்,லாஸ்லியா காதல் வேற லெவல். தற்போது கூட இவர்கள் இருவரும் ‘காதல் காவியங்கள்’ என ரசிகர்கள் கூறிவருகின்றனர்.அதுமட்டும் இல்லாமல் கவின், லாஸ்லியா காதல் குறித்து சமூக வலைதளங்களில் பல விதமான கருத்துக்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
மேலும்,ரசிகர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சி நடந்து கொண்டு இருக்கும் போதே “கவிலியா” என்ற ஹேஷ்டேக் ஒன்றை உருவாக்கி இவர்கள் சம்பந்தமான புகைப்படங்களையும், கருத்துக்களையும் பதிவிட்டு வந்தார்கள். ஆனால், இருவருமே தங்கள் இருவருக்கும் இடையிலான உறவு குறித்து இதுவரை தெளிவாக கூறியது இல்லை. அதுவும் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்தது இவர்கள் இருவரும் சம்மந்தமே இல்லாதது போல இருந்து வருகிறார்கள்.
அதிலும் லாஸ்லியா, கவினை விட பல படங்களில் நடித்து வருகிறார் லாஸ்லியா. இப்படி ஒரு நிலையில் லாஸ்லியாவிற்கு அவரது தந்தை கனடாவில் மாப்பிள்ளை பார்த்துள்ளதாகவும் விரைவில் அவருடன் லாஸ்லியாவிற்கு திருமணம் நடைபெற இருக்கிறது என்றும் தகவல்கள் வெளியாகின. இப்படி ஒரு நிலையில் இதுகுறித்து லாஸ்லியா தரப்பினர் விளக்கமளிகையில் லாஸ்லியாவுக்கு இப்போது திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை என்றும், இவை அனைத்தும் வெறும் வதந்தி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.