லாஸ்லியவிற்கு நடக்கும் கொடுமை.! கடுப்பாகியா கவின்.!

0
4612
promo

பிக் பாஸ் வீட்டில் நேற்று (ஜூலை 23) போட்டியாளர்கள் அனைவருக்கும் டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது. அதில் போட்டியாளர்கள் குழுக்களாக பிரிந்து தங்களுக்கு ஒடுக்கப்பட்ட கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும். இதில் சேரன் நாட்டாமையாக நடித்து வருகிறார்.

லாஸ்லியா சுட்டித்தனமான பெண்ணாக நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் லாஸ்லியா வீட்டில் இருக்கும் சொம்பை திருடியதால் அவரை அபிராமி மற்றும் நாட்டாமையான சேரன் இருவரும் கார்டன் ஏரியாவில் இருக்கும் நாற்கலையில் கட்டிப்போட்டு விடுகின்றனர்.

- Advertisement -

இதனால் கடுப்பாகும் கவின், என்னதான் விளையாட்டிற்காக என்றாலும் இப்படியா ஒருவரை வெய்யிலில் கட்டிப்போடுவது என்று லாஸ்லியாவிற்காக வக்காலத்து வாங்குகிறார். உடனே சேரன் தப்பு செய்தால் அப்படி தான் என்று கத்துகிறார். இவ்வாறாக அந்த ப்ரோமோ நிறைவடைகிறது.

இது ஒருபுறம் இருக்க இந்த வார நாமினேஷன் ப்ராசஸ்ஸை அடுத்து சேரன், மீரா, சரவணன், அபிராமி, கவின், சாக்க்ஷி ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். அதில் சாக்க்ஷியை 7 பேரும், கவினை 5 பேரும், மீராவை 4 பேரும், சேரனை 3 பேரும், சரவணனை 2 பேரும் நாமினேட் செய்துள்ளனர்.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement