இறுதி நாளில் ஒட்டிங்கில் ஏற்பட்டு வரும் அதிரடி மாற்றம்.! முக்கிய வாரத்தில் வெளியேற போகும் நபர் யார் ?

0
23018
- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைய இன்னும் நான்கு வாரமே இருக்கிறது. இந்த சீசன் டைட்டில் வின்னர் யார் என்பதற்கான சுவாரசியம் கூடி வருகிறது. ஆனால் ,இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் எந்த ஒரு கடுமையானடாஸ்க்கும் வைக்கப்படவில்லை. இந்த வாரம் ஒரு போட்டியாளர் வெளியேற போகும் நிலையில் யார் வெற்றி பெறப் போவது என்ற மிகப்பெரிய கேள்வியும் எழுந்துள்ளது.

-விளம்பரம்-
bigg-boss

மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்னும் போட்டியாளர்களுக்கு சவாலான டாஸ்க்கும் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் இந்த வாரம் டிக்கெட் டு பினாலே அதாவது இறுதி போட்டிக்கு நேரடியாக செல்லும் வாய்ப்பிற்கான டாஸ்க் நடைபெற்று வருகிறது. இந்த டாஸ்க் இந்த வாரம் முழுவதும் நடைபெற இருக்கிறது. இந்த வாரத்தின் இறுதியில் அதிக மதிப்பெண்களை பெரும் போட்டியாளருக்கு கோல்டன் டிக்கெட் வழங்கப்படும்.

- Advertisement -

எனவே, இந்த டாஸ்கில் வெற்றிபெற போட்டியாளர்கள் அனைவரும் கடுமையாக போராடி வருகின்றனர். இதுவரை நடந்து முடிந்த டாஸ்கில் தர்ஷன் தான் முன்னிலையில் இருக்கிறார். இது ஒருபுறம் இருக்க இந்த வாரத்தின் நாமினேஷன் நேற்று நடைபெற்று இருந்தது. அதில் சேரன், கவின், லாஸ்லியா, ஷெரின் ஆகியோர் இந்த வாரம் நாமினேட் ஆகியுள்ளனர். இந்த வாரம் கவினை தான் அதிகம் பேர் நாமினேட் செய்துள்ளனர். இருப்பினும் கவினுக்கும் வழக்கம் போல அதிக வாக்குகள் பதிவாகி வருகிறது.

-விளம்பரம்-

இந்த நிலையில் ஒருவேளை இந்த வாரம் நாமினேஷனில் இடம் பெற்றுள்ள சேரன், லாஸ்லியா, ஷெரின் ஆகிய மூவரில் ஷெரின் மற்றும் லாஸ்லியாவிற்கு குறைவான வாக்குகள் பதிவாகி வருகிறது. பல்வேறு இணையத்தளத்தில் நடத்தப்பட்டு வரும் ஒட்டிங்கில் கூட லாஸ்லியாவிற்கு தான் குறைவான வாக்குகள் விழுந்து வருகிறது. எனவே, நியாயபடி லாஸ்லியாதான் வெளியேற வேண்டும். இருப்பினும் பிக் பாஸ் என்ன திட்டம் வைத்திருக்கிறார் என்று நாளை பொறுத்திருந்து பார்ப்போம்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement